உஜ்ஜைனில் பாகிஸ்தான் ஆதரவு கோஷமிட்டவர்களுக்கு எதிராக இந்துக்கள் கூட்டமாக கூடி கோஷமிட்டதாக வீடியோ ஒன்று பரவி வருகின்றது.

வைரலாகும் வீடியோ:
மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைன் நகரில் மொகரம் அன்று சிலர் பாகிஸ்தான் ஆதரவு கோஷமிட்டதாக கூறி வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனைத் தொடர்ந்து உஜ்ஜைன் போலீசார் சிலரை கைது செய்து அவர்கள் மீது இந்திய தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இதுக்குறித்து ஊடகங்களில் செய்தி வந்துள்ளது. அதை இங்கே, இங்கே படிக்கலாம்.

இந்நிலையில் இச்சம்பவம் நடந்து இரண்டு நாட்களில் இந்துக்கள் அப்பகுதிக்கு கூட்டமாக சென்று பாகிஸ்தான் ஆதரவு கோஷமிட்டவர்களுக்கு எதிராக கோஷமிட்டதாக கூறி வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
உஜ்ஜயினி நகரத்தில் சமீபத்திய முகரம் ஊர்வலத்தின்போது முஸ்லிம்கள் பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோஷம் எழுப்பினர்.
சம்பவம் நடந்த இரண்டாம் நாள் அந்த நகரத்தில் உள்ள இந்துக்கள் அனைவரும் காவிக் கொடியுடன் பள்ளிவாசல் முன்பு கூடி
“பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கோஷமிட்டவர்கள் இங்கு வசிக்க வேண்டாம்; பாகிஸ்தானுக்கே செல்லுங்கள்”
என்று கோஷமிட்டு தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
ஒற்றுமையுடன் கூடிய இந்து மக்களின் கூட்டத்தின் கெத்தை பாருங்கள்.
என்று வைரலாகும் வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது.



சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: யூடியூபர் மதன் ரவிச்சந்திரன் மனநிலை பாதிக்கப்பட்டவர்; வைரலாகும் நியூஸ்கார்ட் உண்மையானதா?
Fact Check/Verification
உஜ்ஜைனில் பாகிஸ்தான் ஆதரவு கோஷமிட்டவர்களுக்கு எதிராக இந்துக்கள் கூட்டமாக கூடி கோஷமிட்டதாக வைரலாகும் வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து அறிய வைரலாகும் வீடியோவை ஒவ்வொரு கீ ஃபிரேம்களாக பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தினோம்.
இதில் வைரலாகும் வீடியோ உஜ்ஜைனில் எடுக்கப்பட்டதல்ல, கர்நாடகாவில் எடுக்கப்பட்டது என்கிற உண்மை நமக்கு தெரிய வந்தது.
உண்மையில் வைரலாகும் வீடியோ கர்நாடகாவின் குல்பர்கா பகுதியில் கடந்த 2018 ஆம் ஆண்டு ராமநவமி அன்று எடுக்கப்பட்ட வீடியோவாகும். அதேபோல் பாகிஸ்தான் ஆதரவு கோஷமிட்டவர்களுக்கு எதிராக கோஷமிடும் ஆடியோவும் அவ்வீடியோவைச் சார்ந்ததல்ல, அந்த ஆடியோ எடிட் செய்யப்பட்டு சேர்க்கப்பட்டுள்ளது.
வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான வீடியோவின் புகைப்படத்தையும் வைரலாகும் வீடியோவின் புகைப்படத்தையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.


Also Read: ராகுல் காந்தி குடிபோதையில் கார் ஓட்டியதால் கைது செய்யப்பட்டாரா?
Conclusion
உஜ்ஜைனில் பாகிஸ்தான் ஆதரவு கோஷமிட்டவர்களுக்கு எதிராக இந்துக்கள் கூட்டமாக கூடி கோஷமிட்டதாக பரவும் வீடியோ பொய்யானது என்பதனை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)