திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024
திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

HomeFact CheckViralFact Check: திமுகவுக்கு எதிராக செய்திகளைப் பரப்ப பாஜகவிடம் ஊடகவியலாளர்கள் லஞ்சம் வாங்கியதாக பரவும் போலி...

Fact Check: திமுகவுக்கு எதிராக செய்திகளைப் பரப்ப பாஜகவிடம் ஊடகவியலாளர்கள் லஞ்சம் வாங்கியதாக பரவும் போலி நியூஸ்கார்டுகள்!

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: திமுகவுக்கு எதிராக செய்திகளைப் பரப்ப பாஜகவிடம் ஊடகவியலாளர்கள் லஞ்சம் வாங்கியதாக பரவும் நியூஸ்கார்டுகள்

Fact: வைரலாகும் நியூஸ்கார்டுகள் போலியானவை

திமுகவுக்கு எதிராக பொய் செய்திகளைப் பரப்ப ஆதன் மாதேஷ், ஐயப்பன் ராமசாமி, கிஷோர் கே சாமி, ராஜவேல் நாகராஜன், ரவீந்திரன் துரைசாமி போன்ற ஊடகவியலாளர்கள் பாஜகவிடம் லஞ்சம் வாங்கியதாக நியூஸ்கார்டுகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

திமுகவுக்கு எதிராக செய்திகளைப் பரப்ப பாஜகவிடம் ஊடகவியலாளர்கள் லஞ்சம் வாங்கியதாக பரவும் நியூஸ்கார்டுகள்
Screengrab from Twitter@jaya2016maha

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: Fact check: பிரதமர் மோடி, குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு, மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே என்று பரவும் புகைப்படம் உண்மையா?

Factcheck / Verification

திமுகவுக்கு எதிராக செய்திகளைப் பரப்ப பாஜகவிடம் ஊடகவியலாளர்கள் லஞ்சம் வாங்கியதாக நியூஸ்கார்டுகள் வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.

வைரலாகும் நியூஸ்கார்டுகள் தினமலர், புதிய தலைமுறை மற்றும் ஜூனியர் விகடனின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டுகளை பயன்படுத்தி பரப்பப்படுவதால், இந்நிறுவனங்கள் இவ்வாறு நியூஸ்கார்டை வெளியிட்டதா என அவற்றின் சமூக ஊடகப் பக்கங்களை ஆராய்ந்தோம். அதில் இந்த நியூஸ்கார்டுகளை இந்நிறுவனங்கள் வெளியிட்டதற்கான எந்த தரவும் கிடைக்கவில்லை.

மேலும், ‘தினமலருக்கும் இந்த செய்திக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. தினமலர் பெயர் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது’ என்று தினமலர் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டிருந்ததையும் காண முடிந்தது.

இதனையடுத்து விகடன் ஆசிரியர்களுள் ஒருவரான பிரிட்டோவைத்  தொடர்புக் கொண்டு வைரலாகும் ஜூனியர் விகடன் நியூஸ்கார்ட் குறித்து விசாரிக்கையில், அவர் ‘அந்த நியூஸ்கார்ட் போலியானது, அதை நாங்கள் வெளியிடவில்லை’ என்று தெளிவுப்படுத்தினார்.

இதனைத் தொடர்ந்து புதிய தலைமுறை டிஜிட்டல் தலைவர் இவானியைத் தொடர்புக் கொண்டு புதிய தலைமுறை நியூஸ்கார்ட் குறித்து விசாரித்தோம். அவரும் ‘வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது’ என்று உறுதி செய்தார்.

மதன் ஸ்டிங் ஆப்ரேஷன்

வைரலாகும் நியூஸ்கார்டுகள் போலியானவை என்று உறுதியாகிய நிலையில், அந்த கார்டுகளில் குறிப்பிடப்பட்டிருந்த தகவல் உண்மையானதா என்று ஆராய்ந்தோம். இதில் மதன் ரவிச்சந்திரன் என்பவர் மார்ஸ் தமிழ்நாடு  எனும் யூடியூப் பக்கத்தை தொடங்கி பாஜக தலைவர்களுக்கு எதிராகவும், ஊடகவியலாளர்களுக்கு எதிராவும் பல ஆடியோ வீடியோக்களை வெளியிட்டு வருவதை அறிய முடிந்தது.

இந்த வீடியோக்களில் இவர் கூறும் கருத்துக்கள், காணப்படும் ஆடியோக்கள் மற்றும் வீடியோக்களை காணும்போது திடுக்கிட வைப்பதாக இருந்தாலும், இவை எந்த அளவுக்கு உண்மை என்று நம்மால் அறிய முடியவில்லை. வருங்காலத்தில் தெளிவான ஆதாரங்களும் விளக்கங்களும் கிடைக்கும்பட்சத்தில் அதை இக்கட்டுரையில் சேர்ப்போம் என்று கூறிக் கொள்கின்றோம்.

Also Read: Fact check: 2016 சட்டமன்றத் தேர்தலில் சீமான் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் சைமன் என்று கையொப்பமிட்டாரா?

Conclusion

திமுகவுக்கு எதிராக செய்திகளைப் பரப்ப பாஜகவிடம் ஊடகவியலாளர்கள் லஞ்சம் வாங்கியதாக சமூக ஊடகங்களில் பரவும் நியூஸ்கார்டுகள் போலியானவை என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources

Phone Conversation with I.Britto, Editor, Vikatan, dated March 16, 2023
Phone Conversation with Ivany, Digital Head, Puthiya Thalaimurai, dated March 16, 2023
Tweet from Dinamalar dated March 15, 2023

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

Most Popular