வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024
வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

HomeFact CheckViralஉலகக் கோப்பையை வென்றப்பின் மெஸ்ஸி தனது தாயை அணைத்ததாக பரவும் தவறான வீடியோ!

உலகக் கோப்பையை வென்றப்பின் மெஸ்ஸி தனது தாயை அணைத்ததாக பரவும் தவறான வீடியோ!

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

உலகக் கோப்பையை வென்றப்பின் மெஸ்ஸி தனது தாயை அணைத்ததாக வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.

ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா வென்றப்பின் மெஸ்ஸியின் தாயார் அவரை கட்டியணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

உலகக் கோப்பையை வென்றப்பின் மெஸ்ஸி தனது தாயை அணைத்ததாக பரவும் வீடியோ
Screengrab from Tamil Indian Express

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: ஏடிஎம்மில் பணம் எடுக்கும் முன் 2 முறை கேன்சல் பட்டனை அழுத்தினால் ஏடிஎம் பின் திருடப்படுவதை தடுக்கலாம் என்று ரிசர்வ் வங்கி கூறியதா?

Fact Check/Verification

உலகக் கோப்பையை வென்றப்பின் மெஸ்ஸி தனது தாயை அணைத்ததாக வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவியதை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.

உரிய கீவேர்டுகளை பயன்படுத்தி தேடியதில் உலகக் கோப்பையை வென்றப்பின் மெஸ்ஸி அவரது குடும்பத்தினருடன் மகிழ்ச்சியை கொண்டாடிய புகைப்படங்களை ‘தி சன்’ வெளியிட்டிருந்ததை காண முடிந்தது. அதில் மெஸ்ஸி தன் தாயுடன் இருக்கும் படமும் இடம்பெற்றிருநதது.

Messi Hugging His Mother
Screengrab from The Sun report

இப்படத்தில் மெஸ்ஸியின் தாய் ஊதா நிற டீ சர்ட் அணிந்திருப்பதை காண முடிந்தது. ஆனால் வைரலாகும் வீடியோவில் இருக்கும் பெண்ணோ இளநீல நிறத்தில் டீ சர்ட் அணிந்திருந்தார்.

இதனையடுத்து தொடர்ந்து தேடியதில் உலக கோப்பை இறுதிப்போட்டியில் மெஸ்ஸியின் குடும்பத்தினர் பார்வையிட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களை கெட்டி இமேஜஸ் வெளியிட்டிருந்தது. அப்படங்களிலும் மெஸ்ஸியின் தாய் ஊதா நிற டீ சர்ட்டையே அணிந்திருந்தார்.  அப்படங்களை இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.

இதை தவிர்த்து மெஸ்ஸியின் தாய் மெஸ்ஸியை கட்டியணைத்த புகைப்படம் ஒன்று ராய்ட்டர்ஸ் வெளியிட்டிருந்ததை காண முடிந்தது. அப்படமானது வைரலாகும் வீடியோவிலிருந்து வேறுபட்டிருந்தது. இதை தவிர்த்து, வாட்ச், டாட்டூ என வேறு சில வித்தியாசங்களையும் வைரலாகும் வீடியோவிலிருக்கும் பெண்ணுக்கும் மெஸ்ஸியின் தாயுக்கும் இடையே நம்மால் காண முடிந்தது.

உலக கோப்பையை வென்றப்பின் மெஸ்ஸி தனது தாயை அணைத்ததாக பரவும் வீடியோ- 06
(L-R) Screengrab from viral video and photo of Messi’s mother watching the FIFA final match published in Daily Mail article

வைரல் வீடியோவில் இருந்தவர் யார்?

வைரல் வீடியோவில் இருந்தவர் மெஸ்ஸியின் தாய் இல்லை என்பது உறுதியாகியப்பின் அப்பெண் உண்மையில் யார் என்று தேடினோம். இதில் அவர் அர்ஜென்டினா அணிக்கு பத்து ஆண்டுகளாக சமையல்காரராக இருப்பவர் என்று ஸ்பானிஷ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்ததை காண முடிந்தது. அச்செய்திகளை இங்கே, இங்கே, மற்றும் இங்கே காணலாம்.

உலக கோப்பையை வென்றப்பின் மெஸ்ஸி தனது தாயை அணைத்ததாக பரவும் வீடியோ- 07
Screenshot from eltiempo.com website

Conclusion

உலகக் கோப்பையை வென்றப்பின் மெஸ்ஸி தனது தாயை வைரலாகும் வீடியோவில் இருப்பவர், உண்மையில் மெஸ்ஸியின் தாய் இல்லை  என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

(இச்செய்தியானது ஏற்கனவே நியூஸ்செக்கர் ஆங்கிலத்தில் பிரசுரமாகியுள்ளது)

Result: False

Sources

Report By The Sun, Dated December 18, 2022
Getty Images
Reuters


If you would like us to fact-check a claim, give feedback, or lodge a complaint, WhatsApp us at 9999499044 or email us at checkthis@newschecker.in. You can also visit the Contact Us page and fill out the form

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Most Popular