Claim: அரசியல் அனுபவமில்லாத அண்ணாமலை போன்றவர்களை பொறுப்பாளராக்கியது எங்களது தவறுதான் – பசவராஜ் பொம்மை
Fact: வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானதாகும். News 7 Tamil நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்டு பரவுகிறது.
அண்ணாமலை போன்ற அரசியல் அனுபவமில்லாதவரை பொறுப்பாளராக்கியது எங்களது தவறுதான் என்று கர்நாடக பாஜக முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை பேட்டியளித்ததாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

“இந்தப் பின்னடைவை எதிர்பார்க்கவில்லை. அரசியல் அனுபவமில்லாத அண்ணாமலை போன்றவர்களை பொறுப்பாளராக்கியது எங்களது தவறுதான் – பசவராஜ் பொம்மை” என்று அந்த நியூஸ்கார்ட் வைரலாகிறது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: பாஜக எம்எல்ஏ காரில் எடுத்துச் செல்லப்பட்ட வாக்கு இயந்திரங்களை பொதுமக்கள் அடித்து நொறுக்கினார்களா?
Fact Check/Verification
அண்ணாமலையை கர்நாடக தேர்தல் பொறுப்பாளராக்கியது எங்களது தவறுதான் என்று கர்நாடக முன்னாள் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கூறியதாகப் பரவும் நியூஸ்கார்ட் குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் நியூஸ்கார்ட் News 7 Tamil பெயரில் வெளியாகியிருந்த நிலையில் அவர்களுடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் ஆராய்ந்தோம்.
அதன் முடிவில், “தேர்தலில் ஏற்பட்ட இந்த பின்னடைவை எதிர்பார்க்கவில்லை. ஏன் இந்த பின்னடைவு ஏற்பட்டது என்பது குறித்து பரிசீலிப்போம். வரும் நாடாளுமன்ற தேர்தலை முழு பலத்துடன் எதிர்கொள்வோம்” என்று பசவராஜ் பொம்மை கர்நாடக தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு கூறியிருந்ததாக நியூஸ் 7 தமிழ் வெளியிட்டிருந்த நியூஸ்கார்ட் நமக்குக் கிடைத்தது.
குறிப்பிட்ட நியூஸ்கார்டில் இறுதி வரிகளை மாற்றி அண்ணாமலை பெயரை இணைத்துள்ளனர் என்பதையும் அறிய முடிந்தது.


தொடர்ந்த நம் தேடலில், “இந்த செய்தியை நியூஸ் 7 தமிழ் வெளியிடவில்லை” என்று வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து News 7 Tamil மறுப்பு தெரிவித்து வெளியி்ட்டிருந்த பதிவு நமக்குக் கிடைத்தது.
வைரலாகும் நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்டது என்பது இதன்மூலம் உறுதியாகிறது.
Also Read: கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்துக் கொண்டு போலீசார் மீது கல்லெறிந்தவர்கள் பிடிபட்டதாக பரவும் வதந்தி!
Conclusion
அண்ணாமலையை கர்நாடக தேர்தல் பொறுப்பாளராக்கியது எங்களது தவறுதான் என்று கர்நாடக முன்னாள் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கூறியதாகப் பரவும் நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Altered Image
Our Sources
Facebook Post From, News 7 Tamil, Dated May 13, 2023
Facebook Post From, News 7 Tamil, Dated May 14, 2023
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)