ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28, 2024
ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28, 2024

HomeFact Checkராஜஸ்தான் துணை முதல்வர் தியா குமாரியின் வாள் வீச்சு திறமை என்று பரவும் தவறான வீடியோ!

ராஜஸ்தான் துணை முதல்வர் தியா குமாரியின் வாள் வீச்சு திறமை என்று பரவும் தவறான வீடியோ!

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: தியாகுமாரி ராஜஸ்தானின் காவி சிங்கம்
Fact: வைரலாகும் வீடியோவில் இருப்பவர் அகமதாபாத்தைச் சேர்ந்த யூடியூபர் நிகிதாபா ஆவார்.

ராஜஸ்தான் துணை முதல்வர் தியா குமாரியின் வாள் வீச்சு திறமை என்று வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

”தியாகுமாரி ராஜஸ்தானின் காவி சிங்கம்” என்று இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

Screenshot from X @kaippulla123

Archived Link

Screenshot from facebook/Durga

Facebook Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: மோடி மீண்டும் ஆட்சி அமைத்தால் பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாகும் என்றாரா நிர்மலா சீதாராமன்?

Fact Check/Verification

ராஜஸ்தான் துணை முதல்வர் தியா குமாரியின் வாள் வீச்சு திறமை என்று பரவும் வீடியோ குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் வீடியோவை கீ-ப்ரேம்களாகப் பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கினோம். அப்போது, வைரலாகும் வீடியோவில் இருப்பவர் தியாகுமாரி அல்ல என்பது நமக்கு உறுதியாகியது.

குறிப்பிட்ட வீடியோ Nikitabaa Rathod Official என்கிற யூடியூப் பக்கத்தில் கடந்த ஜனவரி 23, 2024 அன்று பதிவிடப்பட்டிருந்தது. அந்த யூடியூப் பக்கத்தில் நிகிதாபா ரத்தோட் என்னும் அந்த பெண்மணியின் வாள்வீச்சுத்திறமை வீடியோக்கள் பலவும் இடம்பெற்றிருந்ததன.

இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் இவருடைய வாள்வீச்சு வீடியோக்கள் இடம்பெற்றுள்ளன.

Instagram will load in the frontend.

அகமதாபாத்தைச் சேர்ந்த இந்த பெண்மணியின் வீடியோவே தற்போது ராஜஸ்தான் துணை முதல்வர் தியா குமாரி என்று பரவி வருகிறது.

Also Read: 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி பெரும் பின்னடைவை சந்திக்கும் என்றாரா பிரசாந்த் கிஷோர்?

Conclusion

ராஜஸ்தான் துணை முதல்வர் தியா குமாரியின் வாள் வீச்சு திறமை என்று பரவும் வீடியோ தகவல் தவறானது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
YouTube Video from Nikitabaa Rathod official, Dated January 23, 2024

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular