Fact Check
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பன்றி சிலை பரிசாக வழங்கப்பட்டதாகப் பரவும் நியூஸ்கார்ட் உண்மையா?
Claim
மு க ஸ்டாலினுக்கு தெலுங்கர்கள் பன்றி சிலை வழங்குகிறார்கள்
Fact
வைரலாகும் நியூஸ்கார்ட் போலியாக எடிட் செய்யப்பட்டதாகும்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பன்றி சிலை பரிசாக வழங்கப்பட்டதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
“மு க ஸ்டாலினுக்கு தெலுங்கர்கள் பன்றி சிலை வழங்குகிறார்கள் , ஏன் தெரியுமா நமது விஜயநகர பன்றி கொடிய ஆட்சியை திராவிட மாடல் என்று உருட்டி நீதானய்யா ஆளுகின்றீர்கள். தமிழனை ஏமாற்றி ஆள்வதில் நீங்கள் திறமைசாலி என்று பாராட்டி பன்றி சிலையை வழங்கி இருக்கின்றனர்” என்று இந்த புகைப்படம் பரவுகிறது.


சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: மதுரை முருகன் மாநாட்டில் கலந்து கொண்ட கூட்டம் என்று பரவும் வீடியோ உண்மையா?
Fact Check/Verification
முதலமைச்சர் மு.க.ஸ்டாலிக்கு பன்றி சிலை பரிசாக வழங்கப்பட்டதாக பரவும் புகைப்படம் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் புகைப்படம் சன் நியூஸ் வெளியிட்டது போன்று இடம்பெற்றிருந்தாலும் அதில் எழுத்துருக்களோ, முக வடிவங்களோ சரியாக அமைந்திருக்கவில்லை. AI மூலமாக உருவாக்கப்பட்ட வகையில் அதிலுள்ள எழுத்துகள் அமைந்திருந்தன.

எனவே, சன் நியூஸ் சமூக வலைத்தளப்பக்கத்தில் இதுபோன்ற நியூஸ்கார்ட் இடம்பெற்றுள்ளதா என்று ஆராய்ந்தபோது ”முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சிங்கம் சிலை பரிசு!” என்கிற தலைப்பில் நியூஸ்கார்ட் ஒன்று இடம்பெற்றிருந்தது.
அதனை எடிட் செய்தே அவருக்கு பன்றி சிலை வழங்கப்பட்டதாக பரவும் நியூஸ்கார்ட் உருவாக்கப்பட்டுள்ளது என்பது நமக்கு உறுதியாகியது.


மேலும், வைரல் நியூஸ்கார்ட் குறித்து சன் நியூஸ் டிஜிட்டல் பொறுப்பாளர் மனோஜை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர், “வைரல் நியூஸ்கார்ட் போலியானது” என்று விளக்கமளித்தார்.
Also Read: இஸ்ரேல் அதிபர் மகனை இஸ்ரேல் மக்கள் அடித்ததாக பரவும் வீடியோத்தகவல் உண்மையா?
Conclusion
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பன்றி சிலை பரிசாக வழங்கப்பட்டதாகப் பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Instagram Post From, Sun News, Dated June 21, 2025
Facebook Post From, Sun News, Dated June 21, 2025
Phone Conversation with, Manoj, Sun News Tamil, Dated June 27, 2025