சனிக்கிழமை, ஏப்ரல் 27, 2024
சனிக்கிழமை, ஏப்ரல் 27, 2024

HomeFact Checkதமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மீது பாலியல் புகார் என்று பரவும் போலி நியூஸ்கார்ட்!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மீது பாலியல் புகார் என்று பரவும் போலி நியூஸ்கார்ட்!

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மீதான விக்கி லீக்ஸ் பாலியல் புகார் மீது விசாரணை

Fact: வைரலாகும் நியூஸ்கார்ட் போலியாக பரவுகிறது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மீது பாலியல் புகார் என்று நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

“ஸ்டாலின் மீது பாலியல் புகார் – 1970-களில் பல்வேறு பெண்களிடம் லீலைகளில் ஈடுபட்டது குறித்து விக்கிலீக்ஸ் என்ற செய்தி நிறுவனம் ஒரு குற்றச்சாட்டை முன் வைத்தது அதற்கு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில்! தற்போது மத்திய புலனாய்வு அமைப்பு இது குறித்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளது” என்று இந்த நியூஸ்கார்ட் பரவி வருகிறது.

தமிழக முதல்வர்
Screenshot from X @iravana407

Archived Link

Screenshot from Facebook/ganeshrevathi.lganeshraverhi

Facebook Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: சாராயத்தை ஒழிக்க முடியாத திமுக சனாதனத்தை ஒழிப்பது எப்படி என்று கேட்டாரா நடிகர் சித்தார்த்?

Fact Check/Verification

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மீது பாலியல் புகார் என்று பரவும் நியூஸ்கார்ட் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் நியூஸ்கார்ட் புதியதலைமுறை பெயரில் பரவி வருகின்ற நிலையில் குறிப்பிட்ட செப்டம்பர் 20, 2023 அன்று அவ்வாறு நியூஸ்கார்ட் ஏதேனும் வெளியாகியுள்ளதா என்று ஆராய்ந்தோம். ஏனெனில், இதுகுறித்த செய்தி வேறெந்த ஊடகத்திலும் வெளியாகியிருக்கவில்லை. நம்முடைய தேடலில் புதியதலைமுறையும் அவ்வாறு எந்த செய்தியையும் வெளியிடவில்லை என்று உறுதியானது.

எனவே, இதுகுறித்து புதியதலைமுறை டிஜிட்டல் பிரிவு பொறுப்பாளர் இவானியைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, “வைரலாகும் நியூஸ்கார்ட் போலியாக பரவி வருகிறது; இதுபோன்ற எந்த செய்தியையும் நாங்கள் வெளியிடவில்லை” என்று விளக்கமளித்தார். மேலும், நம்முடைய அறிவுறுத்தலைத் தொடர்ந்து தங்களுடைய இணையதளப்பக்கத்திலும் ”வைரல் நியூஸ்கார்ட் போலியானது” என்று புதியதலைமுறை தரப்பில் மறுப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Also Read: எடப்பாடி பழனிச்சாமியிடம் தொலைபேசியில் வருத்தம் தெரிவித்த அண்ணாமலை என்று பரவும் போலி நியூஸ்கார்ட்!

Conclusion

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மீது பாலியல் புகார் என்று பரவும் நியூஸ்கார்ட் போலியானது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் மூலமாக உறுதியாகிறது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Website Post from Puthiyathalaimurai, Dated, September 23, 2023
Phone Conversation With, Ivani, Puthiyathalaimurai, Dated September 23, 2023


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular