Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
அமித்ஷாவை குரங்கு தாக்கியது.
வைரலாகும் வீடியோ செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட போலியான வீடியோவாகும்.
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை குரங்கு தாக்கியதாக வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.



Also Read: சிவகங்கை இளைஞர் அஜித்குமார் மாரடைப்பால் மரணமடைந்தார் என்று மு.க.ஸ்டாலின் கூறினாரா?
உள்துறை அமைச்சர் அமித்ஷாவை குரங்கு தாக்கியதாக பரப்பப்படும் வீடியோவில் அவரை சுற்றி பாதுகாவலர்கள், காவலதிகாரிகள் இருந்தும் அவருக்கு உதவாமல் குரங்குக்கு பயந்து பின்வாங்குவது நம்பும்படியாக இல்லை.
இதனையடுத்து வைரலாகும் வீடியோவை ரிவர்ஸ் சர்ச் செய்கையில், அவ்வீடியோவின் ஒரு பகுதி இந்தியன் எக்ஸ்பிரஸ் 2019 ஆம் ஆண்டு வெளியிட்டிருந்த செய்தியில் பயன்படுத்தப்பட்ட படத்துடன் ஒத்துப்போவதை காண முடிந்தது.


2019 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் அமித் ஷா உள்துறை அமைச்சராக பதவியேற்றப்பின் அமைச்சராக பொறுப்பேற்க வந்ததாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அச்செய்தியில் டெல்லி உள்துறை அமைச்சக கட்டிட வாசலில் எடுக்கப்பட்ட சில படங்கள் பயன்படுத்தப்பட்டிருந்தது. அப்படங்களில் ஒன்றாக மேற்குறிப்பிட்ட படமும் இடம்பெற்றிருந்தது.
இச்செய்தியில் எந்த ஒரு இடத்திலும் அமித்ஷாவை குரங்கு தாக்கியதாக தெரிவிக்கப்படவில்லை.
இதனைத் தொடர்ந்து தேடுகையில் அமித் ஷா அமைச்சராக பொறுபேற்க உள்துறை அமைச்சக கட்டடத்திற்கு வந்ததை wion ஊடகத்தின் யூடியூப் பக்கத்தில் 9 நிமிடம் 22 வினாடி வீடியோவாக வெளியிட்டிருந்ததை காண முடிந்தது.
அவ்வீடியோவின் தொடக்கத்தில் அமித் ஷா உள்துறை அமைச்சக கட்டடத்தில் வாசலில் காரிலிருந்து இறங்கி வரும்போது அதிகாரிகள் அவரை வரவேற்பதையும், இதையடுத்து பத்திரிக்கையாளர்கள் மற்றும் கூடியிருந்தவர்களை வணங்கியவாறே அமைச்சக கட்டடத்துக்குள் அமித் ஷா நுழைவதையும் காண முடிந்தது. இதற்கிடையில் அமித்ஷாவை குரங்கு தாக்கியதாக எந்த ஒரு காட்சியும் இவ்வீடியோவில் இடம்பெற்றிருக்கவில்லை.
இதனைத் தொடந்து தேடுகையில் NDTV, இந்தியா டுடே, டைம்ஸ் ஆஃப் இந்தியா உள்ளிட்ட ஊடகங்களிலும் அமித் ஷா அமைச்சராக பொறுப்பேற்றது குறித்து செய்தி வெளியிடப்பட்டிருந்ததை காண முடிந்தது. இச்செய்திகளிலும் உள்துறை அமைச்சரை குரங்கு தாக்கியதாக செய்தி இடம்பெற்றிருக்கவில்லை.
இதனையடுத்து வைரலாகும் வீடியோவை உற்றுநோக்கியதில் அவ்வீடியோவானது நுண்ணறிவு தொழிற்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதை காண முடிந்தது.

இதனைத்தொடர்ந்துவைரலாகும் வீடியோவை Hive Moderation இணையத்தளம் வழியாக பரிசோதிதோம். இச்சோதனையில் அவ்வீடியோ 81.5 சதவீதம் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்டிருக்கலாம் என பதில் வந்தது.

இதன்பின் wasitAI இணையத்தளம் வாயிலாக சோதித்தோம். அதிலும் இவ்வீடியோ செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்டது என பதில் வந்தது.

உள்துறை அமைச்சர் அமித்ஷாவை குரங்கு தாக்கியதாக பரப்பப்படும் தகவல் தவறானதாகும். செயற்கை நுண்ணறிவு தொழிற்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட போலியான வீடியோவை வைத்து இத்தகவல் பரப்பப்படுகின்றது.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Report from The Indian Express, Dated June 1, 2019
Report from WION, Dated June 1, 2019
Hive Moderation
WasitAI
Vasudha Beri
November 4, 2025
Ramkumar Kaliamurthy
November 3, 2025
Vijayalakshmi Balasubramaniyan
October 15, 2025