Thursday, March 27, 2025
தமிழ்

Fact Check

ஐதராபாத்திலிருந்து மேற்கு வங்கம் செல்லும் இரயிலை ‘முஸ்லீம் எக்ஸ்பிரஸாக’ மாற்றினரா இஸ்லாமியர்கள்?

Written By Kushel Madhusoodan, Edited By Ramkumar Kaliamurthy
Aug 11, 2023
banner_image

Claim: ஐதராபாத்திலிருந்து மேற்கு வங்கம் செல்லும் இரயிலை முஸ்லீம் எக்ஸ்பிரஸாக மாற்றிய இஸ்லாமியர்கள்.

Fact: அது ஒரு சிறப்பு ரயிலாகும். கர்நாடகாவில் அடக்கம் செய்யப்பட்டுள்ள இஸ்லாமிய சூஃபி நினைவிடத்தை காண அவரது நினைவு நாளில் ஏற்பாடு செய்யப்பட்டதாகும். 

“ஐதராபாத்தில் இருந்து மேற்கு வங்கம் செல்லும் ரயிலை முஸ்லிம் எக்ஸ்பிரஸ் என ஜிஹாதிகள் உருவாக்கினர். வாகனம் இப்படி போகாது என்று காவலாளி சொல்ல, ஆனால் ஜிகாதிகள் வாகனத்தை இப்படித்தான் அனுப்ப வேண்டும் என பிடிவாதமாக இருக்கிறார்கள். என்ன மனநிலை இது” என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது.

ஐதராபாத்திலிருந்து மேற்கு வங்கம் செல்லும் இரயிலை முஸ்லீம் எக்ஸ்பிரஸாக இஸ்லாமியர்கள் மாற்றியதாக பரவும் தகவல்
Screenshot from Twitter@NaMo_Bharathan

Twitter Link | Archived Link

ஐதராபாத்திலிருந்து மேற்கு வங்கம் செல்லும் இரயிலை முஸ்லீம் எக்ஸ்பிரஸாக இஸ்லாமியர்கள் மாற்றியதாக பரவும் தகவல்
Screenshot from Twitter@Johni_raja

Archived Link

ஐதராபாத்திலிருந்து மேற்கு வங்கம் செல்லும் இரயிலை முஸ்லீம் எக்ஸ்பிரஸாக இஸ்லாமியர்கள் மாற்றியதாக பரவும் தகவல்
Screenshot from Twitter@ananthamharshi

Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: ஆடி கிருத்திகையில் பழனி முருகன் கோயிலில் ஒரு கோடி பேருக்கு அர்ச்சனை என பரவும் வதந்தி!

Fact Check/Verification

ஐதராபாத்திலிருந்து மேற்கு வங்கம் செல்லும் இரயிலை முஸ்லீம் எக்ஸ்பிரஸாக இஸ்லாமியர்கள் மாற்றியதாக வைரலாகும் வீடியோவை பல்வேறு புகைப்படங்களாக பிரித்து ஆய்வுக்கு உட்படுத்தினோம். அதில் ஒரு படத்தில் ரயிலில் உருது மொழியில் வார்த்தைகள் சில எழுதப்பட்டிருந்ததை காண முடிந்தது. கூகுள் லென்ஸை பயன்படுத்தி அந்த வார்த்தைகளை மொழிப்பெயர்க்கையில், Urs e qadeer Mubarak, jamee ahle silsila qadeeriyah” என வந்தது.

ஐதராபாத்திலிருந்து மேற்கு வங்கம் செல்லும் இரயிலை முஸ்லீம் எக்ஸ்பிரஸாக இஸ்லாமியர்கள் மாற்றியதாக பரவும் தகவல்

இவ்வார்த்தைகளை கீ வார்த்தைகளாக பயன்படுத்தி தேடுகையில் ‘அஷ்டன உப்பவா’ எனும் யூடியூப் பக்கத்தில் ஆகஸ்ட் 03, 2023 அன்று “Sandal Special Train Entry || 46th URS E QUADEER || Astana E Quadeeri, Halkatta Shareef” என்று தலைப்பிட்டு வெளியிடப்பட்டிருந்த வீடியோ ஒன்றில் இதே ரயில் இடம்பெற்றிருப்பதை காண முடிந்தது.

ஐதராபாத்திலிருந்து மேற்கு வங்கம் செல்லும் இரயிலை முஸ்லீம் எக்ஸ்பிரஸாக இஸ்லாமியர்கள் மாற்றியதாக பரவும் தகவல்

குல்பார்கா டைம்ஸ் எனும் யூடியூப் பக்கத்திலும் இதே ரயில் இடம்பெற்றிருப்பதை நம்மால் காண முடிந்தது.

குல்பார்கா டைம்ஸ் வெளியிட்ட மற்றொரு வீடியோவில் இந்த ரயிலானது ஐதராபாத்திலிருந்து கர்நாடகாவின் வாடி ஜங்ஷனுக்கு விடப்பட்ட சிறப்பு ரயில் என்று குறிப்பிடப்பட்டிருப்பதை காண முடிந்தது.

தொடர்ந்து தேடியதில் முகமது பாஷா குவாத்ரி எனும் இஸ்லாமிய சூஃபி ஒருவரின் 46 ஆவது நினைவு நாளை முன்னிட்டு கூட்ட நெரிசலை தவிர்க்க ஐதராபாத்திலிருந்து வாடி ஜங்ஷனுக்கு 4 சிறப்பு ரயில்களை விடுவதாக தெற்கு மத்திய ரயில்வே அறிவித்திருப்பதை காண முடிந்தது.

ஐதராபாத்திலிருந்து மேற்கு வங்கம் செல்லும் இரயிலை முஸ்லீம் எக்ஸ்பிரஸாக இஸ்லாமியர்கள் மாற்றியதாக பரவும் தகவல்

தொடர்ந்து தேடியதில் 2015 ஆம் ஆண்டிலிருந்தே இந்த தினத்திற்கு சிறப்பு ரயில்கள் விடப்படுவதை தெற்கு மத்திய ரயில்வேயில் டிவீட்டுகள் வழியாக அறிய முடிந்தது. அவற்றை இங்கே, மற்றும் இங்கே காணலாம்.

சென்ற வருடமும் இதேபோல் மசூதி கட் அவுட்டை வைத்து இந்த சிறப்பு ரயிலானது அலங்கரிக்கப்பட்டிருப்பதை gohash எனும் யூடியூப் பக்க வீடியோ வழியாக அறிய முடிகின்றது.

ஐதராபாத்திலிருந்து மேற்கு வங்கம் செல்லும் இரயிலை முஸ்லீம் எக்ஸ்பிரஸாக இஸ்லாமியர்கள் மாற்றியதாக பரவும் தகவல்

கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் காண்கையில் இஸ்லாமியர்களுக்காக கர்நாடகாவுக்கு விடப்பட்ட சிறப்பு ரயிலை மேற்கு வங்கம் செல்லும் இரயில் என்று குறிப்பிட்டு, அதை இஸ்லாமியர்கள் முஸ்லீம் எக்ஸ்பிரஸாக மாற்றி விட்டனர் என்று பொய்யான ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகின்றது என்பது புலனாகின்றது.

Also Read: இஸ்லாமியர்கள் வாழும் தெருவில் நுழையக்கூடாது என்று விரட்டப்பட்டாரா இந்து ஒருவர்?

Conclusion

ஐதராபாத்திலிருந்து மேற்கு வங்கம் செல்லும் இரயிலை முஸ்லீம் எக்ஸ்பிரஸாக இஸ்லாமியர்கள் மாற்றியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் தவறானது என்பதை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Youtube video, August 3, 2023
South Central Railways press release, July 27, 2023

இந்த செய்தியானது நியூஸ்செக்கர் ஆங்கிலத்தில் ஏற்கனவே பிரசுரமாகியுள்ளது.


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

image
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91-9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in​. என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். மேலும், எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
About Us

Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check

Contact Us: checkthis@newschecker.in

17,571

Fact checks done

FOLLOW US
imageimageimageimageimageimageimage
cookie

எங்கள் வலைத்தளம் குக்கிகளை பயன்படுத்துகிறது

நாங்கள் குக்கீகளை மற்றும் ஒருவரியக் கொள்கைகளை உதவியுடன் பயன்படுத்துகிறோம், விளக்கமயமாக்க மற்றும் விளக்க பொருட்களை அளவுபடுத்த, மேலும் சிறப்பு அனுபவத்தைப் பயன்படுத்துகிறோம். 'சரி' என்பதை கிளிக் செய்யவும் அல்லது குக்கீ விருதங்களில் ஒரு விருப்பத்தை சோதிக்கும் மூலம், இதுவரை விளக்கப்படுத்தப்பட்டது, என ஒப்புக்கொண்டுள்ளீர்கள் என்று நீங்கள் இதுவரை உங்கள் ஒப்புதலை அறிவிக்கின்றீர்கள், எங்கள் குக்கீ கொள்கையில் உள்ளது.