Fact Check
வங்காளத்தில் இந்து நபர் இஸ்லாமியர்களால் அடித்து கொலை; வைரலாகும் தகவல் உண்மையா?
Claim
வங்காளத்தில் இந்து நபர் இஸ்லாமியர்களால் அடித்து கொலை.

சமூக ஊடகங்களில் வந்த இப்பதிவை இங்கே காணலாம்.
Also Read: தமிழ்நாட்டில் பட்டப்பகலில் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டதாக பரவும் வீடியோத்தகவல் உண்மையானதா?
Fact
வங்காளத்தில் இந்து நபர் இஸ்லாமியர்களால் அடித்து கொல்லப்பட்டதாக வீடியோ ஒன்று பரவியதை தொடர்ந்து அவ்வீடியோவை தனித்தனி புகைப்படங்களாக பிரித்து, அவற்றை ரிவர் சர்ச் முறைக்கு உட்படுத்தி, அவ்வீடியோ குறித்து தேடினோம்.
அத்தேடலில் பங்களாதேசத்தை சேர்ந்த பிரதோம் அலோ எனும் வங்காள மொழி ஊடகத்தில் வைரலாகும் வீடியோ குறித்து ஜூலை 12, 2025 அன்று செய்தி வெளியிடப்பட்டிருந்ததை காண முடிந்தது.

அச்செய்தியில் 39 வயதான பழைய பொருள் வியாபாரி லால் சந்த் என்கிற சோஹக் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இச்சம்பவம் வங்காள தேசம் டாக்காவில் நடந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இச்சம்பவம் குறித்து இறந்தவரின் சகோதரி மஞ்ஜுவரா பேகம் புகாரளித்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து தேடுகையில் தி டெய்லி ஸ்டார் ஊடகத்தில் இறந்தவரின் புகைப்படத்துடன் இச்சம்பவம் குறித்து செய்தி வெளியிட்டிருந்ததை காண முடிந்தது. அச்செய்தியில் கொல்லப்பட்ட சோஹக்கின் மனைவியின் பெயர் லக்கி அக்தர் என்றும், சகோதரி மகனின் பெயர் பிதி அக்தர் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து தேடுகையில் பங்களாதேச ஊடக அணியின் தலைமை ஆலோசகரின் ஃபேஸ்புக் பக்கத்தில் சோஹல் இந்து மதத்தை சார்ந்தவர் அல்ல; அவர் இஸ்லாமிய மதத்தை சார்ந்தவர் என்று தெளிவுப்படுத்தி பதிவிட்டிருப்பதை காண முடிந்தது.

இதன்படி பார்க்கையில் இந்து மதத்தை சார்ந்தவரை இஸ்லாமியர்கள் கொன்றதாக பரவும் தகவல் தவறானது என்பது உறுதியாகின்றது.
Sources
Report By Prothom Alo, Dated July 12, 2025
Report By The Daily Star, Dated July 12, 2025
Facebook Post By Bangladesh Chief Advisor’s Press Wing Facts, Dated July 13, 2025
(இந்த செய்தியானது நியூஸ்செக்கர் ஆங்கிலத்தில் முதன்முதலில் பிரசுரமாகியது. அச்செய்தியை இங்கே காணலாம்)