செவ்வாய்க்கிழமை, மே 21, 2024
செவ்வாய்க்கிழமை, மே 21, 2024

HomeFact Checkமீண்டும் பாஜக ஆட்சி அமைந்தால் ST, SC, OBC இடஒதுக்கீடுகள் ரத்து செய்யப்படும் என்றாரா அமித்...

மீண்டும் பாஜக ஆட்சி அமைந்தால் ST, SC, OBC இடஒதுக்கீடுகள் ரத்து செய்யப்படும் என்றாரா அமித் ஷா?

Authors

Vasudha noticed the growing problem of mis/disinformation online after studying New Media at ACJ in Chennai and became interested in separating facts from fiction. She is interested in learning how global issues affect individuals on a micro level. Before joining Newschecker’s English team, she was working with Latestly.

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: மீண்டும் பாஜக ஆட்சி அமைந்தால் ST, SC, OBC இடஒதுக்கீடுகள் ரத்து செய்யப்படும் என்றார் அமித் ஷா.

Fact: வைரலாகும் வீடியோ எடிட் செய்யப்பட்டதாகும். தெலங்கானாவில் முஸ்லீம்களுக்கு தரப்படும் இட ஒதுக்கீடுகள் ரத்து செய்யப்படும் என்றே அமித் ஷா பேசினார்.

பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தால் ST, SC, OBC இடஒதுக்கீடுகள் ரத்து செய்யப்படும் என்று ஒன்றிய அமைச்சர் அமித் ஷா கூறியதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

மீண்டும் பாஜக ஆட்சி அமைந்தால் ST, SC, OBC இடஒதுக்கீடுகள் ரத்து செய்யப்படும் என்று அமித் ஷா கூறியதாக பரவும் வீடியோ

X Link | Archive Link

மீண்டும் பாஜக ஆட்சி அமைந்தால் ST, SC, OBC இடஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என்று அமித் ஷா கூறியதாக பரவும் வீடியோ

X Link

மீண்டும் பாஜக ஆட்சி அமைந்தால் ST, SC, OBC இடஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என்று அமித் ஷா கூறியதாக பரவும் வீடியோ

X Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: எந்த கட்சிக்கு ஓட்டு போட்டாலும் பாஜகவுக்கே ஓட்டு விழுந்ததால் வாக்குப்பதிவு இயந்திரங்கள் உடைக்கப்பட்டதா?

Fact Check/Verification

மீண்டும் பாஜக ஆட்சி அமைந்தால் ST, SC, OBC இடஒதுக்கீடுகள் ரத்து செய்யப்படும் என்று அமித் ஷா கூறியதாக பரவும் வீடியோவை தனித்தனி கீஃபிரேம்களாக பிரித்து, அவற்றை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி வைரலாகும் வீடியோ குறித்து தேடினோம்.

அத்தேடலில் ‘Will end Muslim reservation in Telangana if BJP wins’: Amit Shah’ என்று தலைப்பிட்டு வைரலாகும் வீடியோ குறித்து ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஏப்ரல் 23, 2023 அன்று செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது.

தெலங்கானாவில் கே.சி.சந்திரசேகர் தலைமையிலான பாரதிய ராஷ்டிரிய சமிதியின் ஆட்சிக்கு கடைசி காலம் தொடங்கிவிட்டது.  தெலங்கானாவில் இந்த ஆட்சி முடியும் வரை பாஜக நிற்காது. தெலங்கானாவில் பாஜக ஆட்சி அமைத்தால் முஸ்லீம்களுக்கு தரப்படும் இடஒதுக்கீடுகள் நீக்கப்படும் என்று அமித் ஷா பேசியதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தெலங்கானாவின் ரங்கரெட்டி மாவட்டத்தில் நடந்தக் கூட்டத்தில் அமித் ஷா இவ்வாறு பேசியதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மீண்டும் பாஜக ஆட்சி அமைந்தால் ST, SC, OBC இடஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என்று அமித் ஷா கூறியதாக பரவும் வீடியோ
Screengrab from Hindustan Times website

இதனையடுத்து தேடுகையில் HW News English யூடியூப் பக்கத்தில் அமித் ஷாவின் இந்த பேச்சு குறித்த வீடியோ பதிவிடப்பட்டிருந்ததை காண முடிந்தது. அவ்வீடியோவில் (01:27 நேரத்தில்), ’பாஜக ஆட்சி அமைத்தால் முஸ்லீம் இட ஒதுக்கீடுகளை நாங்கள் நீக்குவோம். அந்த அதிகாரம் தெலங்கானாவின் பழங்குடியினர், பட்டியலினத்தவர், பிற்படுத்தப்பட்டோருக்கு உரியது…’ என்று அமித்ஷா பேசி இருப்பதை காண முடிந்தது.

தொடர்ந்து தேடுகையில் அமித் ஷாவின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் ஏப்ரல் 23, 2023 அன்று தெலங்கானாவில் அமித் ஷா பேசிய உரையின் முழுப்பகுதி பதிவிடப்பட்டிருந்ததை காண முடிந்தது. அவ்வீடியோவின் 14:35 நேரத்தில் முஸ்லீம் இடஒதுக்கீடு நீக்கம் குறித்து அமித் ஷா பேசி இருப்பதை காண முடிந்தது.

இதனடிப்படையில் பார்க்கையில் அமித் ஷா முஸ்லீம் இடஒதுக்கீடுகளை நீக்கி பழங்குடியினர், பட்டியலினத்தவர், பிற்படுத்தப்பட்டோருக்கு தருவோம் என்று கூறியதை முன்னுக்குப் பின் இடம் மாற்றி எடிட் செய்து ST, SC, OBC இடஒதுக்கீடுகளை ரத்து செய்வோம் என்று அமித் ஷா பேசியதாக தவறான தகவல் பரப்பப்பட்டு வருகின்றது என்பது தெளிவாகின்றது.

அமித் ஷா முஸ்லீம்கள் இட ஒதுக்கீட்டை நீக்குவோம் என்று பேசியது குறித்து வேறு சில ஊடகங்களும் செய்தி வெளியிட்டிருந்தது. அவற்றை இங்கே, மற்றும் இங்கே காணலாம்.

 Also Read: அசாமில் பாஜக வேட்பாளருக்காக ஒரே நபர் 5 முறை வாக்களித்ததாகப் பரவும் வீடியோ தகவல் உண்மையா?

Conclusion

மீண்டும் பாஜக ஆட்சி அமைந்தால் ST, SC, OBC இடஒதுக்கீடுகள் ரத்து செய்யப்படும் என்று அமித் ஷா கூறியதாக பரவும் வீடியோ எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டதாகும். உண்மையில்  முஸ்லீம் இடஒதுக்கீடுகளை நீக்கி பழங்குடியினர், பட்டியலினத்தவர், பிற்படுத்தப்பட்டோருக்கு தருவோம் என்றே அமித் ஷா பேசி இருந்தார்.

இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

இந்த செய்தியானது ஏற்கனவே நியூஸ்செக்கர் ஆங்கிலத்தில் பிரசுரமாகியுள்ளது.

Result: Altered Video

Our Sources
Report By PTI, Dated April 23, 2023
YouTube Video By HW News English, Dated April 24, 2023
YouTube Video By Amit Shah, Dated April 23, 2023


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vasudha noticed the growing problem of mis/disinformation online after studying New Media at ACJ in Chennai and became interested in separating facts from fiction. She is interested in learning how global issues affect individuals on a micro level. Before joining Newschecker’s English team, she was working with Latestly.

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular