Friday, March 14, 2025
தமிழ்

Fact Check

பாஜகவில் தொடர்வது குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும் என்றாரா நயினார் நாகேந்திரன்?

banner_image

பாஜகவில் தொடர்வது குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும் என்று பாஜக துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

பாஜகவில் தொடர்வது குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும் என்று நயினார் நாகேந்திரன் கூறியதாக பரவும் தகவல்

மதுரை விமான நிலையத்தில் தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது கடந்த ஞாயிறன்று செருப்பு வீசி எறியப்பட்டது. இச்சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ‘பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜகவினர் காலணியை வீசியது வெட்கக் கேடானது, கட்சியில்  தொடர்வது குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும்’ என்று பாஜக துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலாகி வருகின்றது.

பாஜகவில் தொடர்வது குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும் என்று நயினார் நாகேந்திரன் கூறியதாக பரவும் தகவல் - 01

Twitter Link | Archive Link

பாஜகவில் தொடர்வது குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும் என்று நயினார் நாகேந்திரன் கூறியதாக பரவும் தகவல் - 02

Facebook Link

பாஜகவில் தொடர்வது குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும் என்று நயினார் நாகேந்திரன் கூறியதாக பரவும் தகவல் - 03

Facebook Link

Also Read: பிரசவத்தின்போது உயிரிழந்த பெண்ணை கண்டு மருத்துவர் கண்ணீர் சிந்தியதாக பரவும் தகவல் உண்மையானதா?

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact Check/Verification

பாஜகவில் தொடர்வது குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும் என்று பாஜக துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதைத் தொடர்ந்து, இவ்வாறு ஒரு கருத்தை நயினார் நாகேந்திரன் கூறினாரா என்பதை உறுதி செய்ய அவரது சமூக ஊடகப் பக்கங்கள் மற்றும் பொது ஊடகங்களை ஆய்வு செய்தோம்.

இதில் வைரலாகும் தகவலை மறுத்து நயினார் நாகேந்திரன அவரது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டிருந்ததை காண முடிந்தது.

இதனைத் தொடர்ந்து, இத்தகவலானது ஜூனியர் விகடனின் நியூஸ்கார்ட் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி பரப்பப்படுவதால், அந்நிறுவனம் இந்த நியூஸ்கார்டை வெளியிட்டதா என்பதை அறிய, ஜூனியர் விகடனின்  சமூக ஊடகப் பக்கங்களை ஆய்வு செய்தோம்.

இதில் வைரலாகும் நியூஸ்கார்டை ஜூனியர் விகடன் வெளியிட்டதற்கான எந்த தரவும் கிடைக்கவில்லை.

இதனையடுத்து  விகடனின் ஆசிரியர் குழுவில் ஒருவரான ஐ.பிரிட்டோவைத் தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து விசாரித்தோம். “வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது” என அவர் தெளிவுப்படுத்தினார்.

Also Read: 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் அரசுக்கு 2.8 லட்சம் கோடி இழப்பு என்று செய்தி வெளியிட்டதா டைம்ஸ் ஆஃப் இந்தியா?

Conclusion

பாஜகவில் தொடர்வது குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும் என்று பாஜக துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியதாக  பரவும் தகவல் முற்றிலும் பொய்யானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக உறுதியாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் வைரலாகும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக்கொள்கின்றோம்.

Result: False

Sources

Nainar Nagenthiran’s Tweet, tweeted on 14/08/2022
Phone Conversation with I.Britto, Vikatan, on 16/08/2022


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

image
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91-9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in​. என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். மேலும், எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
About Us

Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check

Contact Us: checkthis@newschecker.in

17,450

Fact checks done

FOLLOW US
imageimageimageimageimageimageimage
cookie

எங்கள் வலைத்தளம் குக்கிகளை பயன்படுத்துகிறது

நாங்கள் குக்கீகளை மற்றும் ஒருவரியக் கொள்கைகளை உதவியுடன் பயன்படுத்துகிறோம், விளக்கமயமாக்க மற்றும் விளக்க பொருட்களை அளவுபடுத்த, மேலும் சிறப்பு அனுபவத்தைப் பயன்படுத்துகிறோம். 'சரி' என்பதை கிளிக் செய்யவும் அல்லது குக்கீ விருதங்களில் ஒரு விருப்பத்தை சோதிக்கும் மூலம், இதுவரை விளக்கப்படுத்தப்பட்டது, என ஒப்புக்கொண்டுள்ளீர்கள் என்று நீங்கள் இதுவரை உங்கள் ஒப்புதலை அறிவிக்கின்றீர்கள், எங்கள் குக்கீ கொள்கையில் உள்ளது.