ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact Checkஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக சுனந்தா தாமரைச் செல்வன்...

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக சுனந்தா தாமரைச் செல்வன் அறிவிப்பா?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக சுனந்தா தாமரைச் செல்வன் அறிவிப்பு என்பதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

“ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக “சுனந்தா தாமரைச் செல்வன்” -நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்” என்று அந்த நியூஸ்கார்ட் பரவி வருகிறது.

Screenshot From Twitter @Orange_Mittaai

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: பிரதமர் குறித்த ஆவணப்படத்தை தயாரித்த பிபிசி தயாரிப்பாளரை ராகுல் காந்தி சந்தித்தாரா?

Fact Check/Verification

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக சுனந்தா தாமரைச் செல்வன் அறிவிப்பு என்று பரவுகின்ற நியூஸ்கார்ட் குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.

புதியதலைமுறையின் நியூஸ்கார்ட் என்பதாக வைரல் புகைப்படம் பரவி வருகின்றதுடன், அதன் எழுத்துரு புதியதலைமுறையின் நியூஸ்கார்டில் இருந்து வேறுபட்டிருந்தது.

எனவே, புதியதலைமுறையின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தை ஆராய்ந்தோம். அதில், “ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா போட்டி” என்பதாக நியூஸ்கார்ட் வெளியாகியிருந்தது.

தொடர்ந்து, இதுகுறித்து ஆய்வு நடத்தியபோது நாம் தமிழர் கட்சி சார்பில் 29/01/2023 ஞாயிற்றுக்கிழமை ஈரோடு கிழக்கு வேட்பாளர் அறிமுகப் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டு அதில் நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமான், மேனகாவை வேட்பாளராக அறிவித்திருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோவும் நமக்குக் கிடைத்தது.

இதுகுறித்து, புதியதலைமுறை டிஜிட்டல் பிரிவு பொறுப்பாளர் இவானியைத் தொடர்பு கொண்டு கேட்டோம். அப்போது, அவர் வைரல் நியூஸ்கார்ட் ”போலியானது” என்று நமக்கு தெளிவுபடுத்தினார்.

Also Read: சரியான இருக்கை ஒதுக்கப்படாததால் குடியரசு தின விழாவைப் புறக்கணித்தாரா எம்பி எம்.எம்.அப்துல்லா?

Conclusion

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக சுனந்தா தாமரைச் செல்வன் அறிவிப்பு என்று பரவுகின்ற நியூஸ்கார்ட் போலியானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Sources
Twitter Post From, Seeman, Dated January 30, 2023
Facebook Post From, Puthiyathalaimurai, Dated January 29, 2023
YouTube Video From, Naam Tamizhar Party, Dated January 29, 2023
Phone Conversation With, Ivani, Puthiyathalaimurai Digital


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Most Popular