Fact Check
பிரதமர் மோடியை வழியனுப்பும் ரஷ்ய அதிபர் புதின் என்று பரவும் வீடியோ எஸ்சிஓ மாநாட்டில் எடுக்கப்பட்டதா?
Claim
பிரதமர் மோடியை வழியனுப்பும் ரஷ்ய அதிபர் புதின்
Fact
வைரலாகும் வீடியோ கடந்த 2024ஆம் ஆண்டு மாஸ்கோவில் எடுக்கப்பட்டதாகும்.
பிரதமர் மோடியை வழியனுப்பும் ரஷ்ய அதிபர் புதின் என்று வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
“நம் இந்தியப் பாரத பிரதமர் திரு மோடி ஜியை வாசல்வரை வந்து வழி அனுப்பிய ரஷ்யா அதிபர் திரு புடின்” என்று இந்த வீடியோ பரவுகிறது.


சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: ஜெர்மனியில் சைக்கிள் ஓட்டும் முதல்வர் மு.க.ஸ்டாலின் என்று பரவும் வீடியோ உண்மையா?
Fact Check/Verification
பிரதமர் மோடியை வழியனுப்பும் ரஷ்ய அதிபர் புதின் என்று பரவும் வீடியோ குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் வீடியோவைக் கீ-ப்ரேம்களாகப் பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது கடந்த ஜூலை 11, 2024 அன்று Bloomberg News வெளியிட்டிருந்த வீடியோவில் கடந்த ஜூலை 09, 2024 அன்று பிரதமர் மோடி மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் புதினிடம் விடை பெறும் காட்சி என்று தெளிவாக பதிவிடப்பட்டிருந்தது.
Sputnik Mediabank மற்றும் பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்திலும் மாஸ்கோ பயணம் தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.
குறிப்பிட்ட சந்திப்பின்போது எடுக்கப்பட்ட வீடியோவே தற்போது பிரதமரின் சீன பயணத்துடன் தொடர்பு படுத்தி பரப்பப்படுகிறது.
Also Read: பிரதமர் மோடிக்கு சீனா மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தாக பரவும் படம் உண்மையானதா?
Conclusion
பிரதமர் மோடியை வழியனுப்பும் ரஷ்ய அதிபர் புதின் என்று பரவும் வீடியோ கடந்த 2024ஆம் ஆண்டு மாஸ்கோவில் எடுக்கப்பட்டது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
YouTube Video By Bloomberg News, Dated July 11, 2024
Sputnik Mediabank Website
(இக்கட்டுரை நம்முடைய நியூஸ்செக்கர் ஆங்கிலத்திலும் வெளியாகியுள்ளது. அதனை இங்கே படியுங்கள்)