ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact Checkபிரதமர் மோடி தாயின் அஸ்தியை கரைத்ததாக பரவும் பழைய வீடியோ!

பிரதமர் மோடி தாயின் அஸ்தியை கரைத்ததாக பரவும் பழைய வீடியோ!

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

பிரதமர் மோடி தாயின் அஸ்தியை கரைத்ததாக கூறி வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

பிரதமர் மோடி தாயின் அஸ்தியை கரைத்ததாக பரவும் வீடியோ

கடந்த வெள்ளியன்று உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரதமரின் மோடியின் தாயார் ஹீராபென் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில், “தன் தாயுடைய அஸ்தியை கரைக்க இடுப்பளவு தண்ணீரில் பயமில்லாம தனியா போறாரே மனசுக்குள்ள அவ்வளவு விரக்தியா பாவம்னு பீல் பண்ணாதீங்க! இந்தாளுக்கு முன்னாடி கழுத்தளவு தண்ணீரில் ஒருத்தன் கேமராவை தலையில தூக்கி வச்சுக்கிட்டு போறான் அவன்தான் பாவம்” என்று குறிப்பிட்டு, பிரதமர் மோடி அவர் தாயின் அஸ்தியை ஆற்றில் கரைத்ததாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

பிரதமர் மோடி தாயின் அஸ்தியை கரைத்ததாக பரவும் வீடியோ - 01
Screenshot from Twitter @rajlingam78
பிரதமர் மோடி தாயின் அஸ்தியை கரைத்ததாக பரவும் வீடியோ - 02
Screenshot from Facebook / raja84hussain
பிரதமர் மோடி தாயின் அஸ்தியை கரைத்ததாக பரவும் வீடியோ - 03
Screenshot from Facebook / jafar.ali.1217

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: தாயின் மறைவிற்குப் பின் இந்து சமய முறைப்படி தனது தலையை மொட்டை அடித்துக் கொண்டாரா பிரதமர் மோடி?

Fact Check/Verification

பிரதமர் மோடி தாயின் அஸ்தியை கரைத்ததாக கூறி வீடியோ ஒன்று வைரலானதைத் தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.

வைரலாகும் வீடியோவில் பிரதமரை கிண்டல் செய்தாலும் அவ்வீடியோவானது ஹீராபென் அஸ்தியை கரைக்கும்போது எடுக்கப்பட்டது என்பதை நம்பியே பலரும் அதை பகிர்ந்து வருகின்றனர்.

ஆகவே இவ்வீடியோ உண்மையிலேயே பிரதமரின் தாயாரின் அஸ்தியை கரைக்கும்போது எடுக்கப்பட்டதுதானா என்பதை உறுதி செய்ய, வைரலாகும் வீடியோவை ஒவ்வொரு புகைப்படமாக பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி இவ்வீடியோ குறித்து ஆய்வு செய்தோம். அதில் இவ்வீடியோ 2021 ஆம் ஆண்டு டிசம்பரில் எடுக்கப்பட்ட பழைய வீடியோ என்பதை அறிய முடிந்தது.

பிரதமர் மோடி 2021 ஆம் ஆண்டு டிசம்பரில் அவரின் சொந்த தொகுதியான வாரணாசிக்கு இரண்டு நாள் பயணமாக சென்றிருந்தார். அச்சமயத்தில் கங்கை நதியில் நீராடினார். இத்தருணத்தில் எடுக்கப்பட்ட வீடியோவே பிரதமர் மோடி தாயின் அஸ்தியை ஆற்றில் கரைத்ததாக கூறி தற்போது பரப்பப்பட்டு வருகின்றது. பிரதமரின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் இவ்வீடியோ பதிவிடப்பட்டுள்ளது.

அதேபோல் பிரதமரின் டிவிட்டர் பக்கத்திலும் இந்நிகழ்வு குறித்து டிவீட் செய்யப்பட்டுள்ளதை நம்மால் காண முடிந்தது.

Also Read: 2022ஆம் ஆண்டின் ஆசியாவின் மிக மோசமான நாணயமாக இடம் பிடித்துள்ளதா இந்திய ரூபாய்? உண்மை என்ன?

Conclusion

பிரதமர் மோடி தாயின் அஸ்தியை கரைத்ததாக கூறி சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோ முற்றிலும் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Sources

Tweet from @narendramodi dated December 13, 2021
Youtube Video from Narendra Modi dated December 13, 2021


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Most Popular