Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
Claim: கன்னியாகுமாரியில் வாக்கு சேகரிக்க சென்று பாதிரியாரை தாக்கும் காவி சங்கிகள்
Fact: வைரலாகும் வீடியோ கடந்த 2018ஆம் ஆண்டு தெலுங்கானாவில் நடைபெற்ற நிகழ்வாகும்.
கன்னியாகுமரியில் வாக்கு சேகரிக்க சென்ற பாதிரியாரைத் தாக்கும் மக்கள் என்று வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
“கன்னியாகுமாரியில் வாக்கு சேகரிக்க சென்று பாதிரியாரை தாக்க்கும் காவி சங்கிகள்” என்று இந்த வீடியோ பரவி வருகிறது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
கன்னியாகுமரியில் வாக்கு சேகரிக்க சென்ற பாதிரியாரைத் தாக்கும் மக்கள் என்று பரவும் வீடியோ குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் வீடியோவை ஆராய்ந்தபோது அது கடந்த 2018ஆம் ஆண்டு முதல் பல்வேறு பதிவுகளுடனும் பரவி வருவதை அறிய முடிந்தது.
எனவே, வீடியோவை கீ-ப்ரேம்களாகப் பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது Bangalore Mirror வெளியிட்டிருந்த கட்டுரை ஒன்று நமக்குக் கிடைத்தது.
”Fake News Buster: BJP worker didn’t hit priest in church” என்று இந்த செய்தி ஜூன் 04, 2018 அன்று வெளியிடப்பட்டிருந்தது. அதில், வைரல் வீடியோவில் உள்ள பாதிரியாரின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. ”தெலுங்கானாவில் தேவாலய உறுப்பினராக இருந்தவர் பாதிரியாரைத் தாக்கும் காட்சி இது. இதில் எந்தவித அரசியல் கோணமும் இல்லை” என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், தற்போது தமிழில் இந்த வீடியோ வைரலாகும் நிலையில், இச்செய்தி போலியானது என்று தமிழக காவல்துறையும் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read: அண்ணாமலையை கெடா மாடு என்றாரா வானதி சீனிவாசன்?
கன்னியாகுமரியில் வாக்கு சேகரிக்க சென்ற பாதிரியாரைத் தாக்கும் மக்கள் என்று பரவும் வீடியோ தெலுங்கானவைச் சேர்ந்தது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
News Report from, Bangalore Mirror, Dated June 04, 2018
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
March 28, 2024
Tanujit Das
June 6, 2024
Kushel Madhusoodan
June 3, 2024