Fact Check
ஆன்லைனில் வாங்கப்படும் கோமியத்தில் மனித சிறுநீர் கலக்கப்படுகிறது என்றாரா அர்ஜூன் சம்பத்?
Claim
ஆன்லைனில் வாங்கப்படும் கோமியத்தில் மனித சிறுநீர் கலக்கப்படுகிறது என்று அர்ஜூன் சம்பத் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார்.

சமூக ஊடகங்களில் வந்த இப்பதிவை இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.
Also Read: அதிமுகவிலிருந்து கடம்பூர் ராஜூ நீக்கப்பட்டதாகப் பரவும் நியூஸ்கார்ட் உண்மையா?
Fact
ஆன்லைன் கோமியங்களில் மனித சிறுநீர் கலக்கப்படுகின்றது என்று இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டதாக புகைப்படம் ஒன்று பரவிதை தொடர்ந்து இதுக்குறித்து ஆராய்ந்தோம்.
அந்த ஆய்வில் அர்ஜூன் சம்பத் பதிவிட்டதாக வைரலாகும் எக்ஸ் பதிவு ஸ்க்ரீன்ஷாட்டின் பின்புலத்தில் இருந்த உண்மைத்தன்மை நமக்கு தெளிவாகியது.
உண்மையில் அர்ஜூன் சம்பத் பதிவிட்டதாக வைரலாகும் எக்ஸ் பதிவு அர்ஜூன் சம்பத் பதிவிட்டதே அல்ல; அது அர்ஜூன் சம்பத் பெயரில் இயங்கும் போலிக் கணக்கிலிருந்து பதிவிட்டதாகும்.
அர்ஜூன் சம்பத் அவர்களின் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கின் ஐடி ‘@imkarjunsampath’ என்பதாகும். ஆனால் வைரலாகும் எக்ஸ் பதிவு‘@Arjun_sampath_’ என்கிற ஐடியிலிருந்து பதிவிடப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டில் “இந்திய கரன்சி ரூபாயை ரூ’இந்து’ என மாற்ற வேண்டும்” என்று இந்த போலிக் கணக்கிலிருந்து பதிவிடப்பட்ட நிலையில் அர்ஜூன் சம்பத் இவ்வாறு பதிவிட்டதாக பலரும் அவரை விமர்சித்தனர்.
அச்சமயத்தில் நியூஸ்செக்கர் சார்பில் இதுக்குறித்து ஆராய்ந்து அந்த எக்ஸ் கணக்கு அர்ஜூன் சம்பத்தின் எக்ஸ் கணக்கு இல்லை; அவர் பெயரில் இயங்கும் போலி எக்ஸ் கணக்கு என்று நிரூபித்திருந்தோம் (அதுக்குறித்த செய்தியை இங்கே காணலாம்).
இப்போது அதே போலிக்கணக்கிலிருந்த பதிவிடப்பட்ட மற்றொரு பதிவை வைத்தே வைரலாகும் தகவல் பரப்பப்பட்டு வருகின்றது.
Also Read: பாஜக ஆட்சிக்கு வந்தால் ரேஷன் கடைகளில் கோமியம் இலவசமாக வழங்கப்படும் என்று தமிழிசை கூறினாரா?
தற்சமயம் இந்த போலிக் கணக்கானது (@Arjun_sampath_) பயன்பாட்டில் இல்லை.

Sources
Newschecker Article