Claim
ஈரானின் பதட்டநிலை காரணமாக ஈரான்-பாகிஸ்தான் எல்லையான தஃப்தான் வழியாக பாகிஸ்தானியர்கள் நாடு திரும்புகின்றனர்.

சமூக ஊடகங்களில் வந்த இப்பதிவை இங்கே, மற்றும் இங்கே காணலாம்.
Also Read: திருவண்ணாமலை கோவிலில் அசைவம் உண்டதை நியாயப்படுத்தி பேசினாரா சேகர் பாபு?
Fact
ஈரானின் பதட்டநிலை காரணமாக ஈரான்-பாகிஸ்தான் எல்லையான தஃப்தான் வழியாக பாகிஸ்தானியர்கள் நாடு திரும்புவதாக வீடியோ ஒன்று பரவியதை தொடர்ந்து, அவ்வீடியோவை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தினோம்.
அதில் ஆகஸ்ட் 30, 2023 அன்றே @Rizvi_writess எனும் எக்ஸ் பக்கத்தில் வைரலாகும் வீடியோ பதிவிடப்பட்டிருந்ததை காண முடிந்தது. தஃப்தான் எல்லையில் யாத்திரை வந்த பக்தர்கள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகுவதாக அப்பதிவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து தேடுகையில் கர்பாலா சென்ற பக்தர்கள் தஃப்தான் எல்லையில் வரவேற்கப்பட்டதாக கூறி ஆகஸ்ட் 10, 2024 அன்று இதே வீடியோ யூடியூப் பக்கம் ஒன்றில் பதிவிடப்பட்டிருப்பதை காண முடிந்தது.

தொடர்ந்து தேடுகையில் சில ஃபேஸ்புக் பக்கங்களிலும் இதே தகவலுடன் இவ்வீடியோ சென்ற வருடம் ஆகஸ்டில் பகிரப்பட்டிருப்பதை காண முடிந்தது. அப்பதிவுகளை இங்கே, இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.
வைரலாகும் வீடியோ எப்போது, எத்தருணத்தில் எடுக்கப்பட்டது என்பதை நம்மால் உறுதி செய்ய முடியவில்லை. ஆனால் இவ்வீடியோவுக்கும் ஈரானின் பதட்டநிலைக்கும் தொடர்பில்லை என உறுதியாக கூற முடியும்.
ஏனெனில் அவ்வீடியோ 2023 ஆம் ஆண்டிலிருந்தே சமூக ஊடகங்களில் பரவி வருவதை நம்மால் காண முடிகின்றது.
Also Read: கந்துவட்டி கொடுமையால் மரத்தில் கட்டப்பட்ட பெண் என்று பரவும் வீடியோ தமிழகத்தைச் சேர்ந்ததா?
இதே வீடியோ ஈரானியர்கள் பாகிஸ்தானுக்கு தப்பி செல்வதாக கூறி பரவி வருகின்றது. நியூஸ்செக்கர் இந்தியில் அத்தகவல் தவறானது என்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
Sources
X post by the user, @Rizvi_writess, Dated August 30, 2023
YouTube post by Hum Ali Walay, Dated August 10, 2024