Claim: சங்கராச்சாரியர்களுள் ஒருவரே புதிய பாராளுமன்றக் கட்டிடத்தை திறக்க வேண்டும் என்றார் துக்ளக் குருமூர்த்தி.
Fact: வைரலாகும் நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்டதாகும்.
இந்தியாவின் புதிய பாராளுமன்றக் கட்டடத்தை நாளை மறுநாள் (மே 28) பிரதமர் திறக்கவிருக்கின்றார்.
இந்நிலையில் “பாரத தேசத்தின் அரசியலமைப்பு சட்டத்தை இயற்றும் பொறுப்பைத் தகுதியற்றவர்களிடம் நாத்திகரான நேரு ஒப்படைத்ததன் பலனை இன்று வரை அனுபவிக்கிறோம். அது போல இந்த முறையும் நடக்கக்கூடாது. பிரதமர் மோடி, ஜனாதிபதி முர்மு ஆகியோரை விட புதிய பாராளுமன்ற வளாகத்தைத் திறந்து வைக்க சங்கராச்சாரியார்களில் ஒருவரே தகுதியானவராக இருப்பார்” என்று துக்ளக் குருமூர்த்தி கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: கேரளாவில் ஆர்எஸ்எஸ் பெண் முஸ்லீம்களால் கொல்லப்பட்டதாக பரவும் வதந்தி!
Fact Check/Verification
சங்கராச்சாரியர்களுள் ஒருவரே புதிய பாராளுமன்ற கட்டிடத்தை திறக்க வேண்டும் என்று துக்ளக் குருமூர்த்தி கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.
வைரலாகும் நியூஸ்கார்டானது ஜூனியர் விகடனின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பதால் அந்நிறுவனம் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை வெளியிட்டதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம்.
இத்தேடலில் வைரலாகும் நியூஸ்கார்டில் குறிப்பிட்டுள்ள மே 24 அன்று ஜூனியர் விகடன் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை வெளியிட்டதற்கான எந்த தரவும் கிடைக்கவில்லை.
தொடர்ந்து தேடுகையில் “ஆடிட்டர் குருமூர்த்தி மன்னிப்பு கேட்க நீதிமன்றம் உத்தரவு!” என்று தலைப்பிட்டு 27/04/2023 அன்று ஜூனியர் விகடன் நியூஸ்கார்ட் ஒன்றை வெளியிட்டிருப்பதை காண முடிந்தது.
அந்த நியூஸ்கார்ட்டை எடிட் செய்தே மேற்கண்ட போலி நியூஸ்கார்ட் உருவாக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான நியூஸ்கார்டையும், எடிட் செய்யப்பட்ட போலி நியூஸ்கார்டையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.


இதனையடுத்து விகடன் ஆசிரியர் ஐ. பிரிட்டோவை தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட குறித்து விசாரித்ததில், அவரும் அந்த நியூஸ்கார்ட் போலியானது என்பதை உறுதி செய்தார்.
அதேபோல் குருமூர்த்தியும் வைரலாகும் இத்தகவல் தவறானது என்று அவரது டிவிட்டர் பக்கத்தில் மறுப்பு தெரிவித்திருப்பதை நம்மால் காண முடிந்தது.
Also Read: பிரியாணியில் கருத்தடை மாத்திரை கலந்து இந்துக்களுக்கு விற்பனை செய்த முஸ்லீம் நபர் கைதா?
Conclusion
சங்கராச்சாரியர்களுள் ஒருவரே புதிய பாராளுமன்ற கட்டிடத்தை திறக்க வேண்டும் என்று துக்ளக் குருமூர்த்தி கூறியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் நியூஸ்கார்ட் போலியாக எடிட் செய்யப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Altered Photo
Our Sources
Facebook Post from Junior Vikatan, Dated April 27, 2023
Phone Conversation with Britto, Vikatan, Dated May 26, 2023
Tweet from @sgurumurthy, Dated May 25, 2023
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)