Fact Check
விஜய்க்கு போட்டியாக பவன் கல்யாண் இஃப்தார் நோன்பு திறந்ததாக பரவும் தகவல் உண்மையா?

Claim
விஜய்க்கு போட்டியாக பவன் கல்யாண் இஃப்தார் நோன்பு திறந்தார்.
Fact
வைரலாகும் வீடியோவில் காணப்படும் நிகழ்வு 2019ல் நடந்ததாகும். 2019ல் பவன் கல்யாண் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜியா உர் ரஹ்மான் ஷேக் வீட்டில் பிரியாணி சாப்பிட்ட நிகழ்வே இவ்வாறு பரப்பப்படுகின்றது.
கடந்த வெள்ளியன்று தவெக தலைவர் விஜய் இஃப்தார் நோன்பு திறந்த நிலையில், விஜய்க்கு போட்டியாக ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் இஃப்தார் நோன்பு திறந்ததாக வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: பெண்களை கிண்டல் செய்தவர்களை உ.பி. போலீஸ் பொது இடத்தில் வைத்து அடித்தனரா?
Fact Check/Verification
விஜய்க்கு போட்டியாக பவன் கல்யாண் இஃப்தார் நோன்பு திறந்ததாக வீடியோ ஒன்று பரவியதை தொடர்ந்து, அவ்வீடியோவை தனித்தனி படங்களாகப் பிரித்து, அப்படங்களை கூகுள் லென்ஸ் உதவியுடன் ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி தேடினோம்.
இத்தேடலில் தி ஹன்ஸ் இந்தியா இணையத்தள பத்திரிக்கையில் “Pawan Kalyan eats biryani at Janasena MLA candidate’s house in Guntur” என்று தலைப்பிட்டு மார்ச் 25, 2019 அன்று வெளியிட்டிருந்த செய்தியில் வைரலாகும் வீடியோவில் காணப்பட்ட காட்சிகளை படங்களாக பயன்படுத்தியிருப்பதை காண முடிந்தது.
அச்செய்தியில் 2019 ஆம் ஆண்டு ஆந்திரப்பிரதேசத்தில் பொதுத்தேர்தல் நடைப்பெற்றபோது பிரச்சாரத்திற்காக பவன் கல்யாண் குண்டூருக்கு சென்றபோது, கிழக்கு குண்டூர் தொகுதியில் பவன் கல்யாண் தோற்றுவித்த கட்சியான ஜனசேனா கட்சி சார்பில் போட்டியிட்ட ஜியா உர் ரஹ்மான் ஷேக் வீட்டிற்கு சென்றதாகவும், அத்தருணத்தில் ரஹ்மானின் அம்மா குரான் வாசித்ததாகவும், அதை பவண் கல்யாண் மிகவும் விருப்பத்துடன் கேட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த சந்திப்பின்போது பவன் கல்யாணுக்காக சிறப்பு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டதாகவும், அதை ரஹ்மான் குடும்பத்தோடு சேர்ந்து தரையில் உட்கார்ந்து அவர் சாப்பிட்டதாகவும் அச்செய்தியில் தெரிவிக்கக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து தேடுகையில் மேங்கோ நியூஸ், ஃபில்மி ஃபோக்கஸ் உள்ளிட்ட யூடியூப் பக்கங்களிலும் இதுக்குறித்த செய்தி வெளியிடப்பட்டிருந்ததை காண முடிந்தது.

Also Read: Fact Check: வானதி சீனிவாசன் இளவயது படமா இது?
Conclusion
விஜய்க்கு போட்டியாக பவன் கல்யாண் இஃப்தார் நோன்பு திறந்ததாக பரவும் தகவல் தவறானதாகும். 2019 ஆம் ஆண்டில் பவன் கல்யாண் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜியா உர் ரஹ்மான் ஷேக் வீட்டில் பிரியாணி சாப்பிட்ட நிகழ்வே இவ்வாறு பரப்பப்படுகின்றது.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Report published by The Hans India on 25th March 2019
Report published by Mango News on 26th March 2019
Report published by Filmy Focus on 26th March 2019