Fact Check
தமிழகத்தில் பெட்ரோல் விலை இன்று நள்ளிரவு முதல் 65 மட்டுமே என்று பரவும் வதந்தி!

தமிழகத்தில் பெட்ரோல் விலை இன்று நள்ளிரவு முதல் ரூ 65 மட்டுமே என்பதாக நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

Also Read: உள்துறை அமைச்சர் அமித்ஷா அடுத்த பிரதமராக ரகசிய கூட்டம் கூட்டினார் என்பதாக பரவும் வதந்தி!
தமிழகத்தில் மட்டுமின்றி நாடு முழுவதும் பெட்ரோல், டீசல், கேஸ் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை மக்களின் கழுத்தை நெரித்து வருகிறது. ஒன்றிய அரசும் இதுகுறித்து விலைகுறைப்பு போன்ற எந்தவித அறிவிப்பும் வெளியிடவில்லை.
இந்நிலையில், “பெட்ரோல் விலை அதிரடி குறைப்பு. தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை 65 மட்டுமே. தமிழக அரசின் வரி 35 ஐ குறைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி” என்கிற நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது. அதனைத் தொடர்ந்து பெட்ரோல் விலை குறித்த மற்றொரு கார்டும் வைரலாகிறது.




சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact check/ Verification
தமிழகத்தில் பெட்ரோல் விலை இன்று நள்ளிரவு முதல் 65 ரூபாய் மட்டுமே என்று பரவுகின்ற நியூஸ் கார்டு குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
அப்போது, சன் நியூஸ் தொலைக்காட்சியின் டிஜிட்டல் பிரிவு ஆசிரியரான மனோஜ் குறிப்பிட்ட அப்புகைப்படம் போலியாக வடிவமைக்கப்பட்டது என்று நமக்கு தெரிவித்திருந்தார்.
மேலும்,“Made in India போல உலகின் மூலை முடுக்கெல்லாம் Made in Tamilnadu என்ற குரல் ஒலிக்க வேண்டும்” என்கிற முதலமைச்சரின் வாசகங்கள் அடங்கிய நியூஸ் கார்டினை எடிட் செய்தே குறிப்பிட போலி கார்டு உருவாக்கப்பட்டுள்ளது என்பதும் நமக்கு தெரியவந்தது.
Conclusion:
தமிழகத்தில் பெட்ரோல் விலை இன்று நள்ளிரவு முதல் 65 ரூபாய் மட்டுமே என்று பரவுகின்ற நியூஸ் கார்டு எடிட் செய்யப்பட்டது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)