திங்கட்கிழமை, நவம்பர் 25, 2024
திங்கட்கிழமை, நவம்பர் 25, 2024

HomeFact Checkமுன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை அவமதித்தாரா பிரதமர் மோடி?

முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை அவமதித்தாரா பிரதமர் மோடி?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை பிரதமர் மோடி அவமதித்ததாக கூறி வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது

குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் நிறைவடைந்ததை தொடர்ந்து, அவருக்கு பிரிவு உபசரிப்பு விழா கடந்த சனிக்கிழமை ( 23/07/2022) அன்று நடைப்பெற்றது. இவ்விழாவில்  ராம்நாத் கோவிந்த் பிரதமர் மோடியை வணங்கியபோது, பிரதமர் அவரை கண்டுக்கொள்ளாமல் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்ததாக கூறி வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை பிரதமர் மோடி அவமதித்ததாக பரவும் தகவல்

Twitter Link | Archive Link

முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை பிரதமர் மோடி அவமதித்ததாக பரவும் தகவல் - 01

Facebook Link

முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை பிரதமர் மோடி அவமதித்ததாக பரவும் தகவல் - 02

Facebook Link

Also Read: ஸ்மிருதி இராணி மகளின் உணவகத்தில் மாட்டுக்கறி விற்பனை செய்யப்படுவதாக பரவும் புகைப்படத்தின் பின்னணி!

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact Check/Verification

முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை பிரதமர் மோடி அவமதித்ததாக கூறி வீடியோ ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.

நம் ஆய்வில் இந்திய அரசின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியான சன்சத் டிவியின் யூடியூப் பக்கத்தில் ராம்நாத் கோவிந்த் அவர்கள் பாராளுமன்றத்திலிருந்து வெளியேறும் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்ததை காண முடிந்தது.

இந்த வீடியோவின் 59வது நொடியில் ராம்நாத் கோவிந்தும் பிரதமர் மோடியும் ஒருவரையொருவர் வணங்குவதை காண முடிகின்றது.

Sansad TV
Screengrab from YouTube video by Sansad TV

பிரதமரைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் அவர் பின் நின்றிருந்த மற்றவர்களை நோக்கி ராம்நாத் கோவிந்த் வணக்கம் செலுத்தினார். இத்தருணத்தில் பிரதமர் வேறு திசை நோக்கி பார்த்துக் கொண்டிருந்தார். வீடியோவின் இப்பகுதியை மட்டும் வெட்டி, பிரதமர் ராம்நாத் கோவிந்தை அவமானப்படுத்தியதாக கூறி சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.   

குடியரசுத் தலைவரின் அதிகாரப்பூர்வ அலுவகமான ராஷ்டிரபதி பவனின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் ராம்நாத் கோவிந்தின் பிரிவு உபசார விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் பகிரப்பட்டிருந்தது. இதில் ராம்நாத் கோவிந்தும் பிரதமரும்  ஒருவரொருவரை வணங்கும் புகைப்படமும் இடம்பெற்றிருப்பதை நம்மால் காண முடிகின்றது.

Also Read: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு எளிமையாக இருப்பதாக வைரலாகும் படத்தின் உண்மை பின்னணி!

Conclusion

முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை பிரதமர் மோடி அவமதித்ததாக பரவும் தகவல் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் வைரலாகும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக்கொள்கின்றோம்.

Result: Missing Context

Sources

Video Uploaded On YouTube Channel Of Sansad TV On July 23, 2022
Tweet By @rashtrapatibhvn On July 23, 2022


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Most Popular