ஸ்மிருதி இராணி மகள் நடத்தும் உணவகத்தில் மாட்டுக்கறி விற்பனை செய்யப்படுவதாக கூறி மெனு கார்ட் ஒன்றின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணியின் மகள் கீரத் நாக்ரா கோவாவில் சட்ட விரோதமாக மதுபான விடுதி நடத்துவதாக சர்ச்சை கிளம்பியிருக்கும் நிலையில், அந்த விடுதியின் உணவகத்தில் மாட்டுக்கறி கிடைப்பதாக கூறி மெனுகார்ட் ஒன்றின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.



Also Read: அனைத்து மாணவர்களுக்கும் இலவச மடிக்கணிணி வழங்குகின்றதா மத்திய அரசு?
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification
ஸ்மிருதி இராணி மகள் நடத்தும் உணவகத்தில் மாட்டுக்கறி விற்பனை செய்யப்படுவதாக கூறி மெனு கார்ட் ஒன்றின் புகைப்படம் ஒன்று வைரலானதைத் தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.
முன்னதாக, ஸ்மிருதி இராணியின் மகள் கீரத் நாக்ரா கோவாவில் நடத்தும் உணவகம் என்று கூறப்படும் சில்லி அண்ட் சோல்ஸ் உணவகத்தின் மெனு கார்டை ஜொமோட்டோ இணையத்தளத்தில் தேடி கண்டறிந்தோம். சில்லி அண்ட் சோல்ஸின் மெனு கார்ட் வைரலாகும் படத்திலிருக்கும் மெனு கார்டிலிருந்து வேறுபட்டிருந்ததை காண முடிந்தது.

இதனையடுத்து வைரலாகும் மெனு கார்டை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி தேடினோம். இதில் ஈசி டின்னர் எனும் இணையத்தளத்தில், கோவாவில் இயங்கும் அப்பர் டெக் எனும் உணவகத்தின் மெனு கார்டை கண்டறிந்தோம். இந்த மெனு கார்டானது வைரலாகும் மெனு கார்டுடன் ஒற்றுப்போவதை நம்மால் காண காண முடிந்தது.

ஜொமோட்டோ இணையத்தளத்திலும் அப்பர் டெக் உணவகத்தின் மெனு கார்ட் இடம்பெற்றிருப்பதை நம்மால் காண முடிந்தது.
இதனைத்தொடர்ந்து தேடியதில், அப்பர் டெக்கின் ஊழியர் ஒருவர் லாலன்டாப் எனும் இணையத்தள ஊடகத்திடம், “வைரலாகும் படம் எங்கள் உணவகத்தின் மெனு கார்ட்தான். இது ஒரு வருடத்திற்கு முந்தியது. புதிய மெனு கார்டில் மாட்டுக்கறியை நீக்கி விட்டோம். மாட்டுக்கறி விரும்புபவர்கள் தனியாக ஆர்டர் செய்தால் அவர்களுக்கு கிடைக்கும்” என்று கூறியிருந்ததை காண முடிந்தது.
மேலே கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் பார்க்கையில் வைரலாகும் படத்திலிருக்கும் மெனு கார்ட் சில்லி அண்ட் சோல்ஸ் உணவகத்தின் மெனு கார்டல்ல, அது அப்பர் டெக் உணவகத்தின் மெனுகார்ட் என்பதை உறுதி செய்ய முடிகின்றது.
Also Read: எடப்பாடி பழனிசாமி குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக பரவும் விஷம பதிவு!
Conclusion
ஸ்மிருதி இராணி மகள் நடத்துவதாக கூறப்படும் சில்லி அண்ட் சோல்ஸ் உணவகத்தில் மாட்டுக்கறி விற்பனை செய்யப்படுவதாக கூறி பரப்படும் மெனு கார்டின் புகைப்படம், உண்மையில் சில்லி அண்ட் சோல்ஸ் உணவக மெனுகார்டின் புகைப்படம் அல்ல என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் வைரலாகும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக்கொள்கின்றோம்.
இந்த கட்டுரையானது நியூஸ்செக்கர் இந்தியில் ஏற்கனவே பிரசுரமாகியுள்ளது.
Result: False
Sources
Restaurant Details Published in Zomoto and Eazydinner
Article Published in Lallantop
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)