Fact Check
ராகுல் காந்தி இளம்பெண் ஒருவருடன் இன்பச்சுற்றுலா சென்றதாகப் பரவும் வீடியோ தகவல் உண்மையா?
Claim
ராகுல் காந்தி இளம்பெண் ஒருவருடன் வெளிநாட்டிற்கு இன்பச்சுற்றுலா
Fact
வைரலாகும் வீடியோவில் இருப்பவர் அவரது சகோதரி மகள் மிராயா வத்ரா
ராகுல் காந்தி இளம்பெண் ஒருவருடன் இன்பச்சுற்றுலா சென்றதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
”வெளிநாட்டுக்கு ஒரு பெண்ணுடன் இன்பச் சுற்றுலா சென்றுள்ளார் போல நம்ம பப்பு. யாருயா அந்த பொண்ணு???” என்று இந்த வீடியோ பரவுகிறது.


சமூக ஊடகங்களில் வெளிவந்த இத்தகவலின் உண்மைத்தன்மை குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: ‘பேசாமல் ஏமாற்றிய தலைவா’ என்று விஜயை கூறினாரா தவெக நிர்வாகி?
Fact Check/Verification
ராகுல் காந்தி இளம்பெண் ஒருவருடன் இன்பச்சுற்றுலா சென்றதாக பரவும் வீடியோ குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் வீடியோவில் ராகுல் காந்தியுடன் இருப்பது அவரது சகோதரி பிரியங்கா காந்தியின் மகளான மிராயா வத்ரா என்பதை காங்கிரஸ் கமிட்டி தலைவரான சுப்ரியா ஷ்ரினேட் தன்னுடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் பகிர்ந்து அதை தவறாக பகிர்ந்தவர்களை விமர்சித்திருப்பதை நம்மால் காண முடிந்தது.

மேலும், மிராயா வத்ரா குறித்த வேறு சில புகைப்படங்களைத் தேடியபோது அவர் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்கள் இந்த வீடியோவில் இருக்கும் பெண்ணுடன் ஒத்துப்போவதைக் காண முடிந்தது.


அவர், ராகுல் காந்தியுடன் இணைந்து இந்திய ஒற்றுமை யாத்திரையிலும் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராகுல் காந்தியின் மருமகள் மிராயாவையே தவறான நோக்கில் யாரோ ஒரு இளம்பெண்ணுடன் ராகுல் காந்தி இன்பச்சுற்றுலா என்பதாகப் பரப்பி வருகின்றனர்.
Also Read: திரிஷாவின் செல்ஃபியின் பின்புறம் தவெக துண்டு கிடப்பதாகப் பரவும் புகைப்படம் உண்மையா?
Conclusion
ராகுல் காந்தி இளம்பெண் ஒருவருடன் இன்பச்சுற்றுலா சென்றதாக பரவும் வீடியோ தகவல் தவறானது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
X Post By, SupriyaShrinate, Dated November 13, 2025
News Report from, Daily Thanthi, Dated December 12, 2022