Fact Check
பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்க்கை வரலாற்றை இயக்குனர் மோகன் ஜி திரைப்படமாக எடுக்க உள்ளதாக வதந்தி!

பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்க்கை வரலாற்றை இயக்குனர் மோகன் ஜி திரைப்படமாக எடுக்க உள்ளதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

திரௌபதி, ருத்திரதாண்டவம் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குனர் மோகன் ஜி. இவர் தற்போது பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்கவிருப்பதாக கூறி நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
வைரலாகும் அந்த நியூஸ்கார்டில், “ஜெய்பீம் படத்தை விட வலுவான கதை அம்சம் கொண்ட மருத்துவர் ஐயாவின் வரலாற்றை படமாக எடுக்கிறேன். படத்தின் பெயரை மக்கள்தான் சொல்ல வேண்டும்” என்று இயக்குனர் மோகன் ஜி வேண்டுகோள் விடுத்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.



சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact check/ Verification
பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்க்கை வரலாற்றை இயக்குனர் மோகன் ஜி திரைப்படமாக எடுக்க உள்ளதாக கூறி வைரலாகும் நியூஸ்கார்டில் காணப்படும் எழுத்துரு (Font) புதிய தலைமுறையில் வழக்கமாக பயன்படுத்தப்படும் எழுத்துருவிலிருந்து வேறுபட்டிருந்தது. அதேபோல் அதன் டிசைனும் சற்று வேறுபட்டு இருந்தது.
இவற்றையெல்லாம் வைத்து பார்க்கும்போதே இது போலியாக எடிட் செய்யப்பட்டு உருவாக்கப்பட்டது என்பதை நம்மால் உணர முடிந்தது. இருப்பினும் பலர் இந்த நியூஸ்கார்டை உண்மை என்று நம்பி பகிர்ந்து வருவதால், உண்மையிலேயே இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை புதிய தலைமுறை பிரசுரித்ததா என்பதை அதன் சமூக வலைத்தளப் பக்கங்களில் தேடினோம்.
இந்த தேடலில் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை புதிய தலைமுறை பிரசுரித்ததற்கான எந்த ஒரு தரவும் நமக்கு கிடைக்கவில்லை. இதனையடுத்து புதிய தலைமுறையின் டிஜிட்டல் தலைவர் சரவணன் அவர்களைத் தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்துக் கேட்டோம்.
இதற்கு அவர்,
“இது போலியான நியூஸ்கார்ட், இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை நாங்கள் பிரசுரிக்கவில்லை.”
என்று விளக்கமளித்தார்.
Also Read: 2000 உண்மையான இந்துக்களுக்கு நிவாரணம்; வைரலாகும் நியூஸ்கார்ட் உண்மையானதா?
Conclusion
பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்க்கை வரலாற்றை இயக்குனர் மோகன் ஜி திரைப்படமாக எடுக்க உள்ளதாக சமூக வலைத்தளங்களில் வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது என உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
Mr. Saravanan, Digital Head, Puthiya Thalaimurai
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)