ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact CheckRCB மகளிர் அணி கேப்டன் ஸ்மிரிதி மந்தனாவுக்கு வீடியோகால் மூலம் வாழ்த்து தெரிவித்தாரா விஜய்?

RCB மகளிர் அணி கேப்டன் ஸ்மிரிதி மந்தனாவுக்கு வீடியோகால் மூலம் வாழ்த்து தெரிவித்தாரா விஜய்?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: RCB மகளிர் அணி கேப்டன் ஸ்மிரிதி மந்தனாவுக்கு வீடியோகால் மூலம் வாழ்த்து தெரிவித்தார் விஜய்

Fact: வைரலாகும் நியூஸ்கார்டு எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டதாகும்.

மகளிர் பிரீமியர் லீக் போட்டியில் RCB அணி வென்றதை தொடர்ந்து நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் RCB அணியின் கேப்டன் ஸ்மிரிதி மந்தனாவுக்கு வீடியோ கால் மூலம் வாழ்த்து தெரிவித்ததோடு ரூ.100 கோடி வழங்கவுள்ளதாகவும் நியூஸ்கார்டு ஒன்று வைரலாகி வருகின்றது.

RCB மகளிர் அணி கேப்டன் ஸ்மிரிதி மந்தனாவுக்கு விஜய் வீடியோகால் மூலம் வாழ்த்து தெரிவித்ததாக பரவும் நியூஸ்கார்ட்

Facebook Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: எல்.முருகன் ஒடுக்கப்பட்ட இனத்தை சேர்ந்தவர் என்பதால் ராமதாஸ் வீட்டில் இருக்கை தராமல் நிற்க வைக்கப்பட்டாரா?

Fact Check/Verification

RCB மகளிர் அணி கேப்டன் ஸ்மிரிதி மந்தனாவுக்கு விஜய் வீடியோகால் மூலம் வாழ்த்து தெரிவித்ததாக பரவும் நியூஸ்கார்டில் பயன்படுத்தப்பட்டுள்ள எழுத்துரு, மற்றும் அதில் காணப்படும் எழுத்துப்பிழைகளை காணும்போதே அந்த நியூஸ்கார்டு போலியானது என உணர முடிந்தது.

இருப்பினும் பலர் இந்த நியூஸ்கார்டை உண்மை என்று நம்பி பரப்பி வருவதால் இதை முழுமையாக ஆராய்ந்து விளக்க விரும்பினோம். வைரலாகும் நியூஸ்கார்டானது சன் நியூஸின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பதால் அந்நிறுவனம் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை வெளியிட்டதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம்.

இத்தேடலில் ‘RCB மகளிர் அணிக்கு விராட் கோலி வாழ்த்து!’ என்று தலைப்பிட்டு நியூஸ்கார்ட் ஒன்றை சன் நியூஸ் வெளியிட்டிருந்ததை காண முடிந்தது.

அந்த நியூஸ்கார்ட்டை எடிட் செய்தே மேற்கண்ட போலி நியூஸ்கார்டு உருவாக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான நியூஸ்கார்டையும், எடிட் செய்யப்பட்ட போலி நியூஸ்கார்டையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

இதனைத் தொடர்ந்து சன் நியூஸின் டிஜிட்டல் தலைவர் மனோஜை தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து விசாரிக்கையில் வைரலாகும் நியூஸ்கார்ட் எடிட் செய்து மாற்றப்பட்டது என்பதை அவரும் உறுதி செய்தார்.

 Also Read: தமிழகத்தில் 11 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்ததா பாஜக?

Conclusion

RCB மகளிர் அணி கேப்டன் ஸ்மிரிதி மந்தனாவுக்கு விஜய் வீடியோகால் மூலம் வாழ்த்து தெரிவித்ததாக சமூக வலைத்தளங்களில் பரவும் நியூஸ்கார்ட் போலியாக எடிட் செய்யப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Altered Photo

Our Sources
Tweet from Sun News, Dated March 17, 2024
Phone Conversation with Manoj, Sun News

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

Most Popular