சனிக்கிழமை, நவம்பர் 9, 2024
சனிக்கிழமை, நவம்பர் 9, 2024

HomeFact Checkஎல்.முருகன் ஒடுக்கப்பட்ட இனத்தை சேர்ந்தவர் என்பதால் ராமதாஸ் வீட்டில் இருக்கை தராமல் நிற்க வைக்கப்பட்டாரா?

எல்.முருகன் ஒடுக்கப்பட்ட இனத்தை சேர்ந்தவர் என்பதால் ராமதாஸ் வீட்டில் இருக்கை தராமல் நிற்க வைக்கப்பட்டாரா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: எல்.முருகன் ஒடுக்கப்பட்ட இனத்தை சேர்ந்தவர் என்பதால் ராமதாஸ் வீட்டில் இருக்கை தராமல் நிற்க வைக்கப்பட்டார்.

Fact: வைரலாகும் இத்தகவல் தவறானதாகும். கூட்டணி ஒப்பந்தத்தில் ராமதாஸ் கையெழுத்திடும்போது அவர் அருகில் எல்.முருகன் ஒப்பந்தத்துடன் நிற்றிருந்தார். ராமதாஸ் கையெழுத்திட்டப்பின் அந்த ஒப்பந்தத்தை அண்ணாமலையிடம் கொடுத்து விட்டு, அவர் பக்கத்தில் இருக்கையில் அமர்ந்தார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வீட்டில் ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் ஒடுக்கப்பட்டோர் வகுப்பை சேர்ந்தவர் என்பதால் இருக்கை தராமல் அவமானப்படுத்தப்பட்டதாக கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

எல்.முருகன் ஒடுக்கப்பட்ட இனத்தை சேர்ந்தவர் என்பதால் ராமதாஸ் வீட்டில் இருக்கை தராமல் நிற்க வைக்கப்பட்டதாக பரவும் தகவல்

X Link | Archive Link

எல்.முருகன் ஒடுக்கப்பட்ட இனத்தை சேர்ந்தவர் என்பதால் ராமதாஸ் வீட்டில் இருக்கை தராமல் நிற்க வைக்கப்பட்டதாக பரவும் தகவல்

Archive Link

எல்.முருகன் ஒடுக்கப்பட்ட இனத்தை சேர்ந்தவர் என்பதால் ராமதாஸ் வீட்டில் இருக்கை தராமல் நிற்க வைக்கப்பட்டதாக பரவும் தகவல்

Archive Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: தமிழகத்தில் 11 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்ததா பாஜக?

Fact Check/Verification

எல்.முருகன் ஒடுக்கப்பட்ட இனத்தை சேர்ந்தவர் என்பதால் ராமதாஸ் வீட்டில் இருக்கை தராமல் நிற்க வைக்கப்பட்டதாக பரவும் படத்தை கூர்மையாக உற்று நோக்குகையில் ராமதாஸ் ஒரு படிவத்தில் கையெழுத்திடுவதையும், எல்.முருகன் கையில் வேறு ஒரு படிவம் இருப்பதையும் காண முடிந்தது.

எல்.முருகன் ஒடுக்கப்பட்ட இனத்தை சேர்ந்தவர் என்பதால் ராமதாஸ் வீட்டில் இருக்கை தராமல் நிற்க வைக்கப்பட்டதாக பரவும் தகவல்

இதை அடிப்படையாக தேடியதில் வைரலாகும் இப்படமானது பாஜக-பாமகவிடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானபோது எடுக்கப்பட்து என அறிய முடிந்தது. பாஜக-பாமகவிடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானபோது நடந்த சம்பவங்களை நியூஸ் தமிழ் வீடியோவாக அதன் அதன் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் செய்தியாக வெளியிட்டிருந்ததை காண முடிந்தது.

அவ்வீடியோவில் எல்.முருகன் கூட்டணி ஒப்பந்தத்தில் ராமதாஸிடம் கையெழுத்து வாங்க அவரருகில் நிற்பதையும், ராமதாஸ் கையெழுத்திட்டப்பின் ஒப்பந்தத்தை அண்ணாமலையிடம் கொடுப்பதையும், அண்ணாமலை ஒப்பந்தத்தில் கையெழுத்திடும்போது அண்ணாமலைக்கு பக்கத்திலேயே அவர் இருக்கையில் அமர்ந்திருப்பதையும் காண முடிந்தது.

இதனடிப்படையில் பார்க்கையில் எல்.முருகன் அவமதிக்கப்பட்டதாக பரப்பப்படும் தகவல் தவறானது என அறிய முடிகின்றது.

இக்கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது குறித்து வேறு சில ஊடகங்களிலும் செய்தி வந்திருந்தது. அந்த ஊடகங்களிலும் மேற்சொன்ன காட்சிகள் இடம்பெற்றிருப்பதை காண முடிந்தது. அச்செய்திகளை இங்கே, இங்கே, மற்றும் இங்கே காணலாம்.

தொடர்ந்து தேடுகையில் இந்த கூட்டணி ஒப்பந்த கையெழுத்து நிகழ்வு குறித்து எல்.முருகன், அண்ணாமலை மற்றும் பாமகவின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கங்களில் புகைப்படங்களுடன் பதிவுகள் பதிவிடப்பட்டிருப்பதை காண முடிந்தது. அப்படங்களில் எல்.முருகன் அனைவருக்கும் சரிசமாக இருக்கையில் அமர்ந்திருக்கும் படமும் இடம்பெற்றிருந்தது.

Also Read: தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை நிறுத்தப்பட்டதா?

Conclusion

எல்.முருகன் ஒடுக்கப்பட்ட இனத்தை சேர்ந்தவர் என்பதால் ராமதாஸ் வீட்டில் இருக்கை தராமல் நிற்க வைக்கப்பட்டதாக பரவும் தகவல் தவறானதாகும். இந்த உண்மையை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Partly False

Our Sources
Report from News Tamil, Dated March 19, 2024
Tweet from L.Murugan, Union Minister of State for Fisheries, Animal Husbandry, Dairying, Dated March 19, 2024
Tweet from Annamalai, State President, BJP Tamilnadu, Dated March 19, 2024
Facebook post from Pattali Makkal Katchi, Dated March 19, 2024

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

Most Popular