ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact Checkபாஜகவுக்கு ஓட்டு போடாத சென்னை மக்களுக்கு ₹5000 கோடி நிவாரண நிதி தர முடியாது என்றாரா...

பாஜகவுக்கு ஓட்டு போடாத சென்னை மக்களுக்கு ₹5000 கோடி நிவாரண நிதி தர முடியாது என்றாரா அண்ணாமலை?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: பாஜகவுக்கு ஓட்டு போடாத சென்னை மக்களுக்கு ₹5000 கோடி நிவாரண நிதி தர முடியாது என்றார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

Fact: இத்தகவல் முற்றிலும் பொய்யானதாகும். அண்ணாமலை இவ்வாறு ஒரு கருத்தை தெரிவிக்கவே இல்லை. ஆய்வுக்கு பின் தமிழகத்திற்கு தேவைப்படும் நிதி தரப்படும் என்றே அண்ணாமலை கூறியுள்ளார்.

“எங்களுக்கு ஓட்டு போடாத சென்னை மக்களுக்கு மோடி எதுக்கு 5000 கோடி தரணும்? நிவாரண நிதி தர முடியாது” என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

பாஜகவுக்கு ஓட்டு போடாத சென்னை மக்களுக்கு ₹5000 கோடி நிவாரண நிதி தர முடியாது என்று அண்ணாமலை கூறியதாக பரவும் தகவல்

Twitter Link | Archived Link

பாஜகவுக்கு ஓட்டு போடாத சென்னை மக்களுக்கு ₹5000 கோடி நிவாரண நிதி தர முடியாது என்று அண்ணாமலை கூறியதாக பரவும் தகவல்

Facebook Link

பாஜகவுக்கு ஓட்டு போடாத சென்னை மக்களுக்கு ₹5000 கோடி நிவாரண நிதி தர முடியாது என்று அண்ணாமலை கூறியதாக பரவும் தகவல்

Facebook Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: சென்னை இரயில் நிலையத்தில் படகு செல்வதாக பரவும் மும்பை படம்!

Fact Check/Verification

பாஜகவுக்கு ஓட்டு போடாத சென்னை மக்களுக்கு ₹5000 கோடி நிவாரண நிதி தர முடியாது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக தகவல் வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து தேடினோம்.

இத்தேடலில் சமீபத்திய பத்திரிக்கை சந்திப்பு ஒன்றில், ஒன்றிய அரசு  24 மணி நேரத்தில் தமிழ்நாட்டிற்கு 561 கோடி ஒதுக்கியுள்ளதாகவும், தமிழக அரசு கேட்ட 5060 கோடி ஆய்வுக்கு பின் கிடைக்கும் என்றும் அண்ணாமலை பேசி இருப்பதை காண முடிந்தது. இதுக்குறித்த செய்தியானதுநியூஸ் தமிழ் 24X7  யூடியூப் பக்கத்தில் நேற்றைய முன்தினம் (11/12/2023) வெளியிட்டிருந்ததை காண முடிந்தது.

இதனை தொடர்ந்து தமிழக பாஜகவின் மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவை தொடர்புக் கொண்டு வைரலாகும் இத்தகவல் குறித்து விசாரிக்கையில், ‘இத்தகவல் முற்றிலும் பொய்யானது’ என்று அவர் உறுதிபட கூறினார்.

இந்த ஆதாரங்களின்படி பார்க்கையில் அண்ணாமலை குறித்து வைரலாகும் தகவல் முற்றிலும் தவறானது என தெளிவாகின்றது.

Also Read: சென்னை மழையில் வலம் வரும் முதலை என்று பரவும் தவறான பழைய புகைப்படம்!

Conclusion

பாஜகவுக்கு ஓட்டு போடாத சென்னை மக்களுக்கு ₹5000 கோடி நிவாரண நிதி தர முடியாது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக பரவும் தகவல் முற்றிலும் தவறானதாகும். இந்த உண்மையை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Report from News Tamil 24X7, Dated December 09, 2023

Phone Conversation with S.G.Suryah, State Secretay, BJP

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

Most Popular