வியாழக்கிழமை, அக்டோபர் 10, 2024
வியாழக்கிழமை, அக்டோபர் 10, 2024

HomeFact Checkதமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 58 ஆக குறைப்பு என்று அறிவிப்பு வெளியிட்டதா தமிழ்நாடு...

தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 58 ஆக குறைப்பு என்று அறிவிப்பு வெளியிட்டதா தமிழ்நாடு அரசு?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 58 ஆக குறைப்பு என்பதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

தமிழக அரசு
Source: Facebook

தமிழ்நாடு அரசின் கீழ் பணியாற்றி வருகின்ற மாநில அரசு ஊழியர்களுக்கான ஓய்வு பெறுகின்ற வயது 58 ஆக குறைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த திட்டத்திற்கான அரசாணை வருகின்ற ஜனவரி 5, 2022 அன்று வெளியிடப்படும் என்பதாகவும் செய்தியுடன் நியூஸ் கார்டு ஒன்று வைரலாகிறது.

தமிழக அரசு
Source: Facebook

Facebook Link

தமிழக அரசு
Source: Facebook

Facebook Link

Source: Facebook

Facebook Link

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் 57 பேரை நாய் கடித்ததா?

Fact check/Verification

தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 58 ஆக குறைப்பு என்பதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டதாகப் பரவுகின்ற நியூஸ் கார்டு குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.

அதன்படி, கடந்த 2020 ஆம் ஆண்டு கோவிட் தொற்று காரணமாக மாநிலத்தின் நிதி தொடர்பான பிரச்சினைகளை சரிசெய்யும் வகையில் ஓய்வு பெறும் ஆண்டு 59 ஆக உயர்வு, தொடர்ந்து இரண்டாம் அலையின்போது ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்வு என்பதாக அறிவித்திருந்தது அன்றைய அஇஅதிமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு.

இந்நிலையில், தற்போது ஆளும் திமுக ஆட்சி தலைமையிலான தமிழக அரசு ஒய்வு பெறும் வயதை 58 ஆக குறைத்துள்ளது என்று வைரலாகும் செய்தி மற்றும் நியூஸ் கார்டு போலியானது என்பதை புதியதலைமுறை தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தில் தெரிவித்துள்ளது.

புதியதலைமுறை டிஜிட்டல் பிரிவும் இதனை உறுதி செய்தது. மேலும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஓய்வு வயது 58 ஆக குறைக்கப்பட வாய்ப்புள்ளதாக செய்திகள் அடிபட்டாலும், அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Conclusion

தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 58 ஆக குறைப்பு என்பதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டதாகப் பரவுகின்ற நியூஸ் கார்டு போலியானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources

Puthiyathalaimurai

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan

Most Popular