Wednesday, April 23, 2025
தமிழ்

Fact Check

ராமாயணம் திரைப்படத்தில் நடித்து வருவதால் நடிகை சாய்பல்லவி அசைவ உணவு உண்பதில்லையா?

banner_image

Claim: ‘ராமாயணம்’ படத்தில் இப்போது நடித்து வருகிறார் சாய் பல்லவி. அதற்காக, படப்பிடிப்பு முடியும்வரை அசைவ உணவுகள் எதையும் தொடுவதில்லை என உறுதி எடுத்திருக்கிறார்

Fact: வைரலாகும் தகவல் தவறானது என்று மறுத்துள்ளார் சாய் பல்லவி.

ராமாயணம் திரைப்படத்தில் நடித்து வருவதால் நடிகை சாய்பல்லவி அசைவ உணவு உண்பதை தவிர்த்து வருவதாக புகைப்படச் செய்தி ஒன்று பரவி வருகிறது.

”பாலிவுட்டில் ‘ராமாயணம்’ படத்தில் இப்போது நடித்து வருகிறார் சாய் பல்லவி. அதற்காக, படப்பிடிப்பு முடியும்வரை அசைவ உணவுகள் எதையும் தொடுவதில்லை என உறுதி எடுத்திருக்கிறார். எனவே, ஹோட்டலில் கூட சாப்பிடாமல், வெளியூர்களுக்குச் செல்லும்போது கையோடு சமையல்காரர்களை அழைத்துச் செல்கிறார். அவர்கள் சைவமாகச் சமைத்துக் கொடுக்கிறார்கள்.” என்று சினிமா விகடன் இச்செய்தியை வெளியிட்டுள்ளது.

ராமாயணம்
Screenshot from X @SShivajisreeram

X Link/Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

 Also Read: பங்களாதேஷில் மதவெறியால் நடந்த கொடூரம் என்று பரவும் ஹத்ராஸ் வீடியோ!

Fact Check/Verification

ராமாயணம் திரைப்படத்தில் நடித்து வருவதால் நடிகை சாய்பல்லவி அசைவ உணவை தவிர்த்து வருவதாகப் பரவிய செய்தி குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் செய்தி குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ள சாய்பல்லவி, “Most of the times, Almost every-time, I choose to stay silent whenever I see baseless rumours/ fabricated lies/ incorrect statements being spread with or without motives(God knows) but it’s high-time that I react as it keeps happening consistently and doesn’t seem to cease; especially around the time of my films’ releases/ announcements/ cherish-able moments of my career! Next time I see any “reputed” page or media/ individual carrying a cooked up crappy story in the name of news or gossip then you will hear from me legally! Period!” என்று குறிப்பிட்ட செய்தி போலியானது என்று விளக்கமளித்துள்ளார்.

Also Read: அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவுக்கு தவெக தொண்டர்களுக்கு அனுமதி இலவசமா?

Conclusion

ராமாயணம் திரைப்படத்தில் நடித்து வருவதால் நடிகை சாய்பல்லவி அசைவ உணவை தவிர்த்து வருவதாகப் பரவிய செய்தி தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
X Post from Saipallavi, Dated December 11, 2024


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

image
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91-9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in​. என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். மேலும், எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
About Us

Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check

Contact Us: checkthis@newschecker.in

17,862

Fact checks done

FOLLOW US
imageimageimageimageimageimageimage
cookie

எங்கள் வலைத்தளம் குக்கிகளை பயன்படுத்துகிறது

நாங்கள் குக்கீகளை மற்றும் ஒருவரியக் கொள்கைகளை உதவியுடன் பயன்படுத்துகிறோம், விளக்கமயமாக்க மற்றும் விளக்க பொருட்களை அளவுபடுத்த, மேலும் சிறப்பு அனுபவத்தைப் பயன்படுத்துகிறோம். 'சரி' என்பதை கிளிக் செய்யவும் அல்லது குக்கீ விருதங்களில் ஒரு விருப்பத்தை சோதிக்கும் மூலம், இதுவரை விளக்கப்படுத்தப்பட்டது, என ஒப்புக்கொண்டுள்ளீர்கள் என்று நீங்கள் இதுவரை உங்கள் ஒப்புதலை அறிவிக்கின்றீர்கள், எங்கள் குக்கீ கொள்கையில் உள்ளது.