Fact Check
இந்துப்பெண்ணை காதலித்து ஏமாற்றிய முஸ்லீம் இளைஞர் என்னும் வீடியோ உண்மையா?
Claim
இந்துப்பெண்ணை காதலித்து ஏமாற்றிய முஸ்லீம் இளைஞர்
Fact
வைரலாகும் வீடியோ சித்தரிக்கப்பட்ட காட்சியாகும்.
இந்துப்பெண்ணை காதலித்து ஏமாற்றிய முஸ்லீம் இளைஞர் என்று வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
”இது வடநாட்டில் நடந்த சம்பவம் ..!!! ஒரு இந்து பெண்ணை சோசியல் மீடியா மூலமாக காதலித்து கல்யாணம் செய்ய பார்க்கும்போது… தன் பெண்ணுடன் தாய் போலீசில் சொல்லி வரவழைத்து பார்க்கும் போது மாப்பிள்ளையின் பெயர் சலீம். அவனுக்கு முன்பே திருமணமான குடும்பம் உள்ளது.. இதை மறைத்து திருமணம் செய்ய பார்த்திருக்கிறார்.. அப்படி நடந்திருந்தால் அந்தப் பெண்ணின் வாழ்க்கை படு பாதாளத்தில் போய் இருக்கும். சிந்தித்து செயலாற்ற வேண்டுகிறோம்.” என்று இந்த வீடியோ பரவுகிறது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவல் குறித்த உண்மையை அறிய நியூஸ்செக்கர் சார்பில் இதுக்குறித்து ஆராய முடிவு செய்தோம்.
Also Read: ரஷ்யா நிலநடுக்கத்தின் வீடியோவா இது?
Fact Check/Verification
இந்துப்பெண்ணை காதலித்து ஏமாற்றிய முஸ்லீம் இளைஞர் என்று பரவும் வீடியோ குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் வீடியோவைக் கீ-ப்ரேம்களாகப் பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது மாண்டி தீபக் சர்மா என்பவரது சமூக வலைத்தளப்பக்கத்தில் இந்த வீடியோ இடம்பெற்றிருந்தது.
மேலும், அவருடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் இதே போன்று சித்தரிக்கப்பட்ட பல்வேறு வீடியோக்கள் இடம்பெற்றுள்ளது. அவருடைய ஃபேஸ்புக் பக்கத்தில் டிவி நடிகர், டிஜிட்டல் ரீல்ஸ், வீடியோ கிரியேட்டர் என்று இடம்பெற்றுள்ளது. குறிப்பிட்ட வீடியோவில் இடம்பெற்றுள்ள நடிகர்களை தொடர்ச்சியாக வேறு சில வீடியோக்களிலும் அவருடைய பக்கத்தில் காண முடிந்தது.

எனவே, கற்பனையாக சமூக வலைத்தளத்திற்காக உருவாக்கப்பட்ட இந்த நபரின் வீடியோவே உண்மை என்பதாக பரவுகிறது என்பது இதன்மூலம் நமக்கு உறுதியாகிறது.
Also Read: அதிமுகவிலிருந்து கடம்பூர் ராஜூ நீக்கப்பட்டதாகப் பரவும் நியூஸ்கார்ட் உண்மையா?
Conclusion
இந்துப்பெண்ணை காதலித்து ஏமாற்றிய முஸ்லீம் இளைஞர் என்று பரவும் வீடியோ சித்தரிக்கப்பட்ட ஒன்றாகும்.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Instagram Post by, Monty Deepak Sharma, Dated July 27, 2025
Facebook Page of Monty Deepak Sharma