சீமான், நாம் தமிழர் கட்சித்தலைவரான இவர், விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவரான பிரபாகரனுடன் இணைந்திருக்கும் புகைப்படத்தை ஒன்றிய அரசு வெளியிட்ட போலி படம் மற்றும் பிரபலங்களுடன் நிற்பது போன்ற உருமாற்றம் செய்து உருவாக்கப்படும் சமூக வலைத்தள கணக்குகளை நீக்குவது குறித்து வெளியிட்ட அறிவிப்பில் சன் நியூஸ் பயன்படுத்தியதாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

ஒன்றிய அரசு, சமூக வலைத்தளங்களில் போலியான புகைப்படங்களையோ, பிரபலங்களுடன் நிற்பது போன்ற உருமாற்றம் செய்து உருவாக்கப்படும் பதிவுகள் குறித்த புகார்கள் தெரிவிக்கப்பட்ட 24 மணி நேரத்தில் அக்குறிப்பிட்ட கணக்குகளை சமூக வலைத்தள நிறுவனங்கள் நீக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில், இதுகுறித்த செய்தியை வெளியிட்ட சன் நியூஸ் செய்தி நிறுவனம், குறிப்பிட்ட செய்தியில் விடுதலைப்புலிகள் தலைவர் மேதகு பிரபாகரனுடன் நாம் தமிழர் கட்சித் தலைவரான சீமான் நிற்கும் புகைப்படத்தைப் பயன்படுத்தியிருப்பதாக நியூஸ் கார்டு ஒன்று வைரலாகிறது.



சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification:
சீமான், ஈழத்தலைவர் பிரபாகரனுடன் இருக்கும் புகைப்படத்தை சன் நியூஸ் செய்தி நிறுவனம், சமூக வலைத்தளங்களில் போலியாக பகிரப்படும் படங்கள் குறித்த ஒன்றிய அரசு அறிவிப்பு செய்திக்கு பயன்படுத்தியதாகப் பகிரப்படும் புகைப்படத்தின் உண்மைத்தன்மை குறித்து அறிய முதலில் சன் நியூஸ் நிறுவனம் அதுபோன்ற நியூஸ் கார்டினை வெளியிட்டிருக்கிறதா என்று ஆராய்ந்து பார்த்தோம்.
அதில், குறிப்பிட்ட அந்த செய்திக்கு அவர்கள் பிரதமர் மோடி செல்போனில் சமூக வலைத்தளங்களை ஆராய்வது போன்ற புகைப்படத்தையே நியூஸ் கார்டில் பயன்படுத்தியுள்ளனர் என்பது நமக்குத் தெரிய வந்தது. அவர்களுடைய சமூக வலைத்தள பக்கங்களிலும் அதையே பகிர்ந்துள்ளனர்.

தொடர்ந்து, இதுகுறித்து சன் நியூஸ் டிஜிட்டல் டீமைச் சேர்ந்த செய்தியாளரிடம் பேசினோம். அவர், குறிப்பிட்ட சீமான் புகைப்படம் இடம் பெற்றுள்ள வைரல் நியூஸ் கார்டு சன் நியூஸ் செய்தி நிறுவனத்தால் வெளியிடப்பட்ட உண்மையான நியூஸ் கார்டினை எடிட் செய்து உருவாக்கப்பட்டது என்று விளக்கமளித்தார்.

எடிட் செய்யப்பட்டது

உண்மையான நியூஸ் கார்டு
Conclusion:
சீமான், ஈழத்தலைவர் பிரபாகரனுடன் இருக்கும் புகைப்படத்தை சன் நியூஸ் செய்தி நிறுவனம், சமூக வலைத்தளங்களில் போலியாக பகிரப்படும் படங்கள் குறித்த ஒன்றிய அரசு அறிவிப்பு செய்திக்கு பயன்படுத்தியதாகப் பகிரப்படும் புகைப்படம் உண்மையான நியூஸ் கார்டினை எடிட் செய்து பகிரப்படுகிறது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources:
Sun news Digital team
Sun news Facebook: https://www.facebook.com/SunNewsTamil/posts/4371475872909095
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)