கருக்கலைக்க காரணமான ஆண்களுக்கு பட்ஜெட்டில் எந்த சலுகையும் இல்லை என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாக நியூஸ்கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: பெண்களை கிண்டல் செய்தவர்களை உ.பி. போலீஸ் பொது இடத்தில் வைத்து அடித்தனரா?
Fact Check/Verification
கருக்கலைக்க காரணமான ஆண்களுக்கு பட்ஜெட்டில் எந்த சலுகையும் இல்லை என்று சீமான் கூறியதாக நியூஸ்கார்டு ஒன்று பரவியதை தொடர்ந்து, சீமான் இவ்வாறு பேசினாரா என தேடினோம்.
இத்தேடலில் சீமான் அண்மையில் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய வீடியோ நியூஸ் 18 தமிழ்நாடு யூடியூப் பக்கத்தில் மார்ச் 16, 2025 அன்று பதிவிட்டிருப்பதை காண முடிந்தது. அவ்வீடியோவில் 2025 தமிழ்நாடு பட்ஜெட் குறித்தும் சீமான் விமர்சித்து பேசி இருந்தார். ஆனால் அவ்வீடியோவில் வைரலாகும் நியூஸ்கார்டில் குறிப்பிட்டுள்ள கருத்தை அவர் பேசி இருக்கவில்லை.
இதனையடுத்து வைரலாகும் இத்தகவல் பாலிமர் நியூஸின் நியூஸ்கார்டு டெம்ப்ளேட்டை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பதால் அந்நிறுவனம் வைரலாகும் நியூஸ்கார்டை வெளியிட்டதா என தேடினோம்.
இத்தேடலில் பாலிமர் நியூஸ் வைரலாகும் நியூஸ்கார்டை வெளியிட்டிருக்கவில்லை. மாறாக தமிழக பட்ஜெட், கவர்ச்சி அறிவிப்புகளை மட்டுமே கொண்ட வெற்று அறிக்கை என சீமான் விமர்சித்ததாக நியூஸ்கார்டு ஒன்றை வெளியிட்டிருந்ததை காண முடிந்தது.
இந்த நியூஸ்கார்டை வைரலாகும் நியூஸ்கார்டுடன் ஒப்பிட்டு பார்க்கையில், இந்த கார்டை எடிட் செய்தே வைரலாகும் நியூஸ்கார்டு உருவாக்கப்பட்டுள்ளது என அறிய முடிந்தது.


இதனையடுத்து பாலிமர் நியூஸின் டிஜிட்டல் பொறுப்பாளர் சுரேந்தரை தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்டு குறித்து விசாரிக்கையில் வைரலாகும் நியூஸ்கார்டு எடிட் செய்யப்பட்டது என்று அவரும் உறுதி செய்தார்.
Also Read: இந்திய கிரிக்கெட் அணி வெற்றியை கொண்டாடும் தாலிபான்கள் என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?
Conclusion
கருக்கலைக்க காரணமான ஆண்களுக்கு பட்ஜெட்டில் எந்த சலுகையும் இல்லை என்று சீமான் கூறியதாக பரவும் நியூஸ்கார்டு எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டதாகும்.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Report published by News 18 Tamilnadu on March 16, 2025
X Post by Polimer News on March 15, 2025
Phone Conversation With Suredndar, Polimer News