Fact Check
பங்காரு அடிகளாருக்கும் சீமானுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று மேல்மருவத்தூர் சித்தர் பீடம் மறுத்ததா?

Claim: பங்காரு அடிகளாருக்கும் சீமானுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று மேல்மருவத்தூர் சித்தர் பீடம் மறுப்பு
Fact: வைரலாகும் செய்தி தவறானதாகும். மேல்மருவத்தூர் சித்தர் பீடம் இந்த மறுப்பை வெளியிடவில்லை.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர் பங்காரு அடிகளார் கடந்த வியாழக்கிழமை (அக்டோபர் 19) அன்று காலமானார். இவரின் இறப்புக் குறித்து கடந்த சனியன்று நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் சீமானிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பங்காரு அடிகளார் எனக்கு ரொம்ப நெருக்கம். அப்பா – பிள்ளை போன்ற பாசப்பிணைப்பு என்று சீமான் பதிலளித்தார்.
இந்நிலையில், “எந்த காலத்திலும் பங்காரு அடிகளார் அவர்களுக்கும் சீமானுக்கும் எந்த ஒரு தொடர்பும் இருந்ததில்லை என்பதை தெளிவுப்படுத்துகிறோம். அவர் என்ன கதை விட்டாலும் அதை யாரும் நம்ப வேணாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது” என்று மேல்மருவத்தூர் சித்தர் பீடம் மறுப்பு தெரிவித்ததாக அறிக்கை ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: ஹமாஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட இஸ்ரேல் பெண் பேட்டி என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?
Fact Check/Verification
பங்காரு அடிகளாருக்கும் சீமானுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று மேல்மருவத்தூர் சித்தர் பீடம் மறுப்பு தெரிவித்ததாக அறிக்கை ஒன்று வைரலானதை தொடர்ந்து அதுக்குறித்து ஆய்வு செய்தோம்.
முன்னதாக சித்தர் பீடத்தின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கங்கள் மற்றும் இணையத்தளத்தில் வைரலாகும் இந்த அறிக்கை பகிரப்பட்டுள்ளதா என ஆராய்ந்தோம். அதில் இவ்வாறு ஒரு அறிக்கை வெளியிடப்பட்டதற்கான எந்த தரவும் கிடைக்கவில்லை.
இதனையடுத்து மேல்மருவத்தூர் சித்தர் பீடத்தின் மக்கள் தொடர்பு அலுவலகத்தை தொடர்புக் கொண்டு இந்த அறிக்கை குறித்து விசாரித்தோம். அதில் வைரலாகும் அறிக்கை போலியானது என அவர்கள் உறுதி செய்தனர்.
Also Read: இஸ்ரேல் தாக்குதலில் தப்பிக்க பாலஸ்தீனிய முஸ்லீம்கள் இந்திய தேசியக் கொடியை பயன்படுத்தினரா?
Conclusion
பங்காரு அடிகளாருக்கும் சீமானுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று மேல்மருவத்தூர் சித்தர் பீடம் மறுப்பு தெரிவித்ததாக வைரலாகும் அறிக்கை போலியானதாகும்.இந்த உண்மையை உரிய ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
Phone Conversation with PRO, Melmaruvathur Siddhar Peedam
Self Analysis
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)