Fact Check
சீமான் திரைப்படப் பாடல் ஒன்றில் பின்னணி நடனம் ஆடியதாகப் பரவும் வீடியோ தகவல் உண்மையா?
Claim
சீமான் திரைப்படப் பாடல் ஒன்றில் பின்னணி நடனம்
Fact
வைரலாகும் காட்சிகளில் சீமான் முகம் எடிட் செய்யப்பட்டுள்ளது.
சீமான் திரைப்படப் பாடல் ஒன்றில் பின்னணி நடனம் ஆடியதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
“திரள்நிதி திருடன் இந்த கூட்டத்துல ஆடுரானே” என்றும் ”அதிபரை இப்படி குரூப்ல டூப் போல அட விட்டுட்டீங்களே பாவி” என்றும் இந்த வீடியோ பரவுகிறது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: கவின் கொல்லப்பட்ட காட்சி என்று பரவும் வீடியோ உண்மையானதா?
Fact Check/Verification
சீமான் திரைப்படப் பாடல் ஒன்றில் பின்னணி நடனம் ஆடியதாகப் பரவும் வீடியோ குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் புகைப்படத்தை நன்கு ஆராய்ந்தபோது அதில் சீமான் நடனம் ஆடுவதாக காணப்படும் நபரின் உண்மையான முகம் அடிக்கடி வெளியில் தெரிந்தது. மேலும், ஒவ்வொரு காட்சியிலும் வேறு வேறு பின்னணி நடனக்கலைஞர்களின் முகத்தில் சீமான் முகம் இடம்பெற்றிருந்தது. இதிலிருந்தே சீமானின் முகம் அப்பாடலில் எடிட் செய்யப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது என்பது உறுதியாகியது.







தொடர்ந்து, இந்த பாடலின் முழுமையான காட்சி Ayngaran Music பக்கத்தில் இடம்பெற்றிருந்த நிலையில் அதனை ஆராய்ந்தபோது, சீமான் என காட்டப்படும் நபர் வேறொருவர் என்பது நமக்கு உறுதியாகியது.
வைரலாகும் பாடலில் சீமான் முகம் இடம்பெற்றுள்ள காட்சிகளை கீ-ப்ரேம்களாகப் பிரித்து WasitAI மற்றும் Sight Engine tool மூலமாக ஆராய்ந்தபோது குறிப்பிட்ட சில இடங்களில் AI எடிட் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது என்பதும், Face Manipulation செய்யப்பட்டுள்ளது என்பதும் நமக்கு உறுதியாகியது.


எனவே, குறிப்பிட்ட பாடலில் சீமானின் முகத்தை எடிட் செய்து பரப்பி வருகின்றனர் என்பது நமக்கு உறுதியாகியது.
Also Read: மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட அரசு திட்டங்களுக்கு தேர்தல் வரை தடை கோரினாரா சி.வி.சண்முகம்?
Conclusion
சீமான் திரைப்படப் பாடல் ஒன்றில் பின்னணி நடனம் ஆடியதாகப் பரவும் வீடியோ AI மூலமாக எடிட் செய்யப்பட்டது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
YouTube Video From, Ayngaran Movies, Dated March 16, 2024
Analysis by, Wasitai and Sight Engine tool
Self Analysis