வியாழக்கிழமை, மே 2, 2024
வியாழக்கிழமை, மே 2, 2024

HomeFact Checkமாரிமுத்துவுடன் தேவர் மகன் படம் பார்த்துவிட்டு விடிய விடிய பேசியதாக சீமான் கூறியது பொய்யா?

மாரிமுத்துவுடன் தேவர் மகன் படம் பார்த்துவிட்டு விடிய விடிய பேசியதாக சீமான் கூறியது பொய்யா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: மாரிமுத்துவுடன் தேவர் மகன் படம் பார்த்துவிட்டு விடிய விடிய பேசியதாக சீமான் கூறியது பொய்.

Fact: இது உண்மையான தகவலாகும். மறைந்த நடிகர் மாரிமுத்துவே இதை நேர்காணல்களில் கூறியுள்ளார்.

இயக்குனரும் நடிகருமான மாரிமுத்து அண்மையில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவரின் இழப்புக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட அரசியல் பிரபலங்கள், திரையுலகை சார்ந்தவர்கள் என பலர் இரங்கல் தெரிவித்தித்திருந்தனர்.

இந்த வரிசையில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் மாரிமுத்துவுக்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில், ‘தேவர் மகன்’ திரைப்படம் வெளிவந்தபோது சென்னை உதயம் திரையரங்கத்தில் வாசலில் அண்ணன் அறிவுமதி அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு முதன் முதலாக சகோதரர் மாரிமுத்துவை சந்தித்த அந்த இரவில், பார்த்து முடித்த பிறகு ‘தேவர் மகன்’ திரைப்படம் எங்கள் இருவருக்குள்ளும் ஏற்படுத்திய தாக்கம் குறித்து கோடம்பாக்கம் வரை விடிய விடிய பேசி நடந்த அந்த நினைவுகள் இன்றும் பசுமையாக என் நெஞ்சில் நிழலாடுகிறது’ என்று குறிப்பிட்டிருந்தார்.

சமயம் தமிழ் உள்ளிட்ட ஊடகங்களும் இந்த அறிக்கை குறித்து செய்தி வெளியிட்டிருந்தது.

ஆனால் சமூக ஊடகங்களில் பலரும் சீமான் பொய் கூறுவதாக கூறி இத்தகவலை பகிர்ந்து வருகின்றனர்.

மாரிமுத்துவுடன் தேவர் மகன் படம் பார்த்துவிட்டு விடிய விடிய பேசியதாக சீமான் கூறியது

X Link | Archived Link

மாரிமுத்துவுடன் தேவர் மகன் படம் பார்த்துவிட்டு விடிய விடிய பேசியதாக சீமான் கூறியது

Facebook Link

மாரிமுத்துவுடன் தேவர் மகன் படம் பார்த்துவிட்டு விடிய விடிய பேசியதாக சீமான் கூறியது

Facebook Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: பாஜகவின் பொய்யால் குரோர்பதி நிகழ்ச்சியில் ரூ.7.5 கோடியை இழந்த நபர் என்று பரவும் வீடியோ உண்மையா?

Fact Check/Verification

மாரிமுத்துவுடன் தேவர் மகன் படம் பார்த்துவிட்டு விடிய விடிய பேசினேன் என்று சீமான் பொய் பேசியதாக தகவல் ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.

இந்த ஆய்வில் சீமான் கூறியது பொய்யல்ல, உண்மையே என்று அறிய முடிந்தது. மறைந்த நடிகர் மாரிமுத்துவே சினிமா விகடனுக்கு அவர் தந்த நேர்காணலில் இத்தகவலை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து தேடியதில் ஆதன் சினிமாவுக்கு தந்த நேர்காணலிலும் இத்தகவலை மாரிமுத்து கூறியிருப்பதை காண முடிந்தது.

Also Read: லியோ திரைப்படத்திலிருந்து லோகேஷ் கனகராஜ் விலகியதாக பரவும் போலி நியூஸ்கார்டு!

Conclusion

மாரிமுத்துவுடன் தேவர் மகன் படம் பார்த்துவிட்டு விடிய விடிய பேசியதாக சீமான் கூறியது பொய்யல்ல, அது உண்மைதான் என்பதை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Youtube Video from Cinema Vikatan
Youtube Video from Aadhan Cinema

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular