Fact Check
காமராஜர் இறந்தபோது அழுத அறிஞர் அண்ணா என்று உளறிய சீமான்…வெளியிட்டு திருத்திய ஊடகங்கள்!
Claim
காமராஜர் இறந்தபோது அழுத அண்ணாதுரை - சீமான்
Fact
வைரலாகும் தகவலை தவறாக பேசியுள்ளார் சீமான். காமராஜருக்கு முன்பாகவே அண்ணாதுரை காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
Claim
காமராஜர் இறந்தபோது அழுத அண்ணாதுரை என்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசியிருந்தார் நாதக தலைவர் சீமான். அதனை ஊடகங்களும் அப்படியே செய்தியாக வெளியிட்டிருந்தன.

சமூக ஊடகங்களில் வந்த இப்பதிவை இங்கே மற்றும் இங்கே காணலாம்.
Also Read: ‘Sorry வேண்டாம் – Sorry கேளு’… குழப்புமுறும் வகையில் பதாகை பிடித்திருந்தாரா விஜய்?
Fact
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மூத்த மகனும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சகோதரருமான மு.க முத்து உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள முதலமைச்சரின் இல்லத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை நேரில் சந்தித்து மு.க.முத்துவின் மறைவிற்கு ஆறுதல் தெரிவித்தார்.
அதன்பிறகு, ஊடகவியலாளர்களிடம் பேசிய சீமான், அப்பேட்டியில் காமராஜர் மறைவிற்கு அறிஞர் அண்ணா கதறியழுதார் என்பதாக பேசியிருந்தார். ஊடகங்களும் அந்த உரையை முழுமையாக வெளியிட்டு பின்னர் அவருடைய பேச்சு சமூக ஊடகங்களில் பேசுபொருளாகிய பிறகு அதனை எடுத்துக் காட்டியிருந்தன.
சீமான் பேசியது குறித்து ஆராய்ந்தபோது தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் சி.என்.அண்ணாதுரை கடந்த பிப்ரவரி 03, 1969ல் காலமானார் என்பது நமக்கு உறுதியாகியது. இதுகுறித்த தரவுகளை இங்கே, இங்கே மற்றும் இங்கே படியுங்கள்.

ஆனால், காமராஜர் காலமான வருடம் 1975ஆம் ஆண்டாகும். அதாவது, அண்ணா இறந்தபிறகே காமராஜர் ஆறு வருடங்கள் கழித்து உயிரிழந்துள்ளார். அவர் காலமான செய்தி நியூயார்க் டைம்ஸ் கோப்புகளுக்கான பக்கத்தில் அக்டோபர் 03, 1975 தேதியுடன் இன்றும் “Kumaraswami Kamaraj Dead; Power Broker in Indian Politics” என்கிற தலைப்பில் இடம்பெற்றுள்ளது. அதுகுறித்த செய்தியை இங்கே, இங்கே மற்றும் இங்கே காணுங்கள்.

Also Read: நடிகை ஜோதிகா நீச்சல் உடையில் இருப்பதாக பரவும் படம் உண்மையானதா?
எனவே, காமராஜர் மறைவிற்கு அறிஞர் அண்ணா கண்ணீர் விட்டு அழுததாக சீமான் கூறிய தகவல் தவறான வரலாற்றுப்பிழை என்பது இதன்மூலம் உறுதியாகிறது.
Sources
Report from, Hindustan Times, Dated Februry 02, 2022
Report From, Indian Express, Dated October 03, 2015