Fact Check
முதல்மரியாதை படத்தின் கதை தன்னுடையது என்று பேசினாரா சீமான்?
Claim
முதல்மரியாதை படத்தின் கதை என்னால் எழுதப்பட்டது - நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமான்
Fact
வைரலாகும் வீடியோ திரிக்கப்பட்டு பரவுகிறது. அவர் பசும்பொன் திரைப்படம் குறித்தே பேசியிருந்தார்.
முதல்மரியாதை படத்தின் கதை என்னால் எழுதப்பட்டது என்று நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமான் பேசியதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
”நான் எழுதியதால் தான் முதல் மரியாதை படம் வெற்றி பெற்றது
நான்தான் அந்த படத்தின் எழுத்தாளர் முதல் மரியாதை 1985 ஆம் ஆண்டு வெளிவந்தது இயக்குநர் பாரதிராஜா திரை கதை பாரதிராஜா !! உதவி இயக்குநர்கள் யாரும் இல்ல அந்த படத்தின் கதை , வசனம், எழுத்தாளர் செல்வராஜ் ” என்று இந்த வீடியோ பரவுகிறது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: கேரள முஸ்லீம்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக சிந்து நதி நீரை திறக்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினரா?
Fact Check/Verification
முதல்மரியாதை படத்தின் கதை தன்னுடையது என்பதாக நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமான் பேசியதாகப் பரவும் வீடியோ தகவல் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
பரமசிவன் ஃபாத்திமா என்கிற திரைப்பட இசை வெளியீட்டு விழா ஒன்றில் சீமான் பேசிய வீடியோவின் ஒரு பகுதியே அவர் முதல்மரியாதை திரைப்படத்திற்கு கதை எழுதியதாக கூறியதாகப் பரவுகிறது.
எனவே, குறிப்பிட்ட இசைவெளியீட்டு விழாவின் முழுமையான பதிவினை ஆராய்ந்தோம். அதில், பாரதிராஜவைத் தன் தந்தை என்பதாகக் கூறி பேசியிருந்த சீமான், பசும்பொன் திரைப்படத்திற்கு கதை எழுதிய எழுத்தாளர் அவர்தான் என்பதாகக் கூறி பேசியிருந்தார். அதில் நடிகர் திலகம் சிவாஜியை பாரதிராஜா இயக்கியது பற்றி பேசும்போது முதல்மரியாதை திரைப்படத்தையும் குறிப்பிட்டு பேசியிருந்தார். ஆனால், சீமான் முதல்மரியாதை திரைப்பட கதையே தன்னுடையதுதான் என்று கூறியதாக இந்த வீடியோ தகவல் திரித்துப் பரப்பப்படுகிறது.
பசும்பொன் திரைப்படத்திற்கு கதை மற்றும் திரைக்கதை எழுதியவர் சீமான். திரைப்படத்தின் ஆரம்ப பெயர்களிலேயே சீமான் பெயர் இடம்பெற்றிருப்பதையும் காண முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: இந்திய கொடியுடன் ஊர்வலம் சென்ற பலுசிஸ்தான் மக்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?
Conclusion
முதல்மரியாதை படத்தின் கதை தன்னுடையது என்பதாக நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமான் பேசியதாகப் பரவும் வீடியோ தகவல் திரிக்கப்பட்டது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
YouTube Video From, Seeman, Dated May 26, 2025
YouTube Video From, Tamil Star, Dated May 27, 2025