“கத்தறாங்க. அவங்களுடைய கருத்தெல்லாம் வந்து அவங்க ஏதோ சாதிச்சு, மக்களுக்கு ஏதோ அவங்க பெருசா பண்ணி, சாதிச்ச மாதிரியே பேசறான். யார்டானு பாத்தா ஜீரோ. ஏதோ நாம கத்தனா நம்மள பத்து பேர் பாப்பாங்க’ங்கற ஒரே விஷயத்துக்காக அவன் பேசிட்டு இருக்கான். அவங்களுக்கெல்லாம் தகுதியே இல்லை. யார் பத்தி பேசறதுக்கும். ஃபர்ஸ்ட் நீ ஒன்னு பண்ணு. நீ 5 பர்சண்டுக்காவது அச்சீவ் பண்ணு. இல்லையா அரசியல் மீது கருத்து வக்கிறயா.. நீ உன்னோட சர்க்கள்ளயோ, உன்னோட சொஸைட்டிலயோ என்ன பண்ணிருக்க? அதையாவது காட்டு. சும்மா கத்திட்டே இருக்கும்போது எனக்கு இந்த மென்டலுகள புடிச்சு உள்ள போடுங்கடா டேய், அப்படிங்கற மாதிரி இருக்கு….” என்று நடிகர் ஷாம் பேசும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.
ஷாம் ஜீரோ என்று கூறியது நடிகர் விஜய் குறித்துதான் என்று கூறி இவ்வீடிவானது பரப்பப்பட்டு வருகின்றது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: பெண் ராணுவ வீரர் கிரண் ஷெகாவத் பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இறந்ததாக பரவும் வீடியோ உண்மையானதா?
Fact Check/Verification
விஜய் ஒரு ஜீரோ என்று நடிகர் ஷாம் கூறியதாக பரவும் வீடியோவில் பிஹைண்ட் டாக்கீஸ் எனும் ஊடகத்தின் லோகோ, மற்றும் வாட்டர்மார்க் இடம்பெற்றிருப்பதை காண முடிந்தது.

இதை ஆதாரமாக வைத்து அந்த ஊடகத்தின் யூடியூப் பக்கத்தில் இவ்வீடியோ குறித்து தேடினோம். இத்தேடலில் ‘விஜய் அண்ணாவை யாராலும் தடுக்க முடியாது | Shaam exclusive interview’ என்று தலைப்பிட்டு பிப்ரவரி 26, 2025 அன்று வைரலாகு வீடியோவின் முழுப்பகுதி பதிவிட்டிருப்பதை காண முடிந்தது.
இவ்வீடியோவின் 10:02 நேரத்தில் வைரலாகும் வீடியோவில் காணப்படும் பகுதி இடம்பெற்றிருந்தது. உண்மையில் ஷாம் அப்பகுதியில் விஜய்க்கு ஆதரவாகவே பேசி இருந்தார். விஜய்க்கு எதிராக பேசியவர்களையே அவர் தாக்கி பேசி இருந்தார்.
ஷாம் உண்மையில் பேசி இருந்ததாவது;
விஜய் சார் வந்து அரசியல் கட்சி ஆரம்பிச்சு, மாநாடு பண்ணும்போது… எனக்கு தெரிஞ்சு, என்னோட பார்வைல நெறைய சேடிஸ்ட், நெறைய மென்டல் பசங்களுக்கு… எக்ஸ்போஸ் ஆயிட்டாங்க.. அவரோட அரசியல் ஸ்டார் பண்ண உடனே.. என்னென்னமோ பேசறாங்க, சம்மந்தமே இல்லாம கத்தறாங்க. அவங்களுடைய கருத்தெல்லாம் வந்து அவங்க ஏதோ சாதிச்சு, மக்களுக்கு ஏதோ அவங்க பெருசா பண்ணி, சாதிச்ச மாதிரியே பேசறான். யார்டானு பாத்தா ஜீரோ. ஏதோ நாம கத்தனா நம்மள பத்து பேர் பாப்பாங்க’ங்கற ஒரே விஷயத்துக்காக அவன் பேசிட்டு இருக்கான். அவங்களுக்கெல்லாம் தகுதியே இல்லை. விஜய் அண்ணா மட்டும் இல்லை; யார் பத்தி பேசறதுக்கும். ஃபர்ஸ்ட் நீ ஒன்னு பண்ணு. நீ 5 பர்சண்டுக்காவது அச்சீவ் பண்ணு. இல்லையா அரசியல் மீது கருத்து வக்கிறயா.. நீ உன்னோட சர்க்கள்ளயோ, உன்னோட சொஸைட்டிலயோ என்ன பண்ணிருக்க? அதையாவது காட்டு. சும்மா கத்திட்டே இருக்கும்போது எனக்கு இந்த மென்டலுகள புடிச்சு உள்ள போடுங்கடா டேய், அப்படிங்கற மாதிரி இருக்கு….”
Also Read: இந்திய எல்லைக்குள் புகுந்த பாகிஸ்தான் விமானம் பொசுக்கி தள்ளப்பட்டதாக பரவும் வீடியோ உண்மையானதா?
Conclusion
விஜய் ஒரு ஜீரோ என்று நடிகர் ஷாம் கூறியதாக பரவும் வீடியோ தவறானதாகும். ஷாம் விஜய்க்கு ஆதரவாக பேசும் கருத்துகளை மட்டும் நீக்கி இவ்வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
YouTube Video from Behind Talkies, Dated February 26, 2025