சிங்கார சென்னை 2.0 திட்டத்துக்கு தமிழக அரசு ரூ.39,532 கோடி ஒதுக்கியுள்ளதாக தகவல் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.

தமிழக அரசு சிங்கார சென்னை 2.0 திட்டத்துக்கு ரூ.39,532 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய்யப்பட்டுள்ளது என்று கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறி தகவல் ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.



Also Read: வீடு மற்றும் கடை வாடகைக்கு ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் என்றாரா நிர்மலா சீதாராமன்?
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification
சிங்கார சென்னை 2.0 திட்டத்துக்கு தமிழக அரசு ரூ.39,532 கோடி ஒதுக்கியுள்ளதாக தகவல் ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
முன்னதாக, தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையத்தளமான www.tn.gov.in–ல் கொள்கை விளக்கக் குறிப்பு பிரிவில் ஆய்வு செய்தோம். இதில் சிங்கார சென்னை 2.0 திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதை அறிய முடிந்தது. ஆனால் இத்திட்டத்திற்கு உண்மையில் ரூ.39,532 கோடி ஒதுக்கப்படவில்லை. ரூ.500 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை அறிய முடிந்தது.

Ful Report: https://cms.tn.gov.in/sites/default/files/documents/maws_t_pn_2022_23.pdf
நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனும் இத்திட்டத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவே பட்ஜெட் கூட்டத் தொடரில் பேசியுள்ளதை காண முடிந்தது.
இவற்றில் அடிப்படையில் பார்க்கும்போது சிங்கார சென்னை 2.0 திட்டத்துக்கு ரூ.39,532 கோடி தமிழக அரசு ஒதுக்கியுள்ளதாக பரவும் தகவல் தவறானது என்பது உறுதியாகின்றது.
Also Read: எரிவாயு சிலிண்டருக்கு மாநில அரசு 55 சதவீதம் வரி விதிக்கின்றதா?
Conclusion
சிங்கார சென்னை 2.0 திட்டத்துக்கு தமிழக அரசு ரூ.39,532 கோடி ஒதுக்கியுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவும் தகவல் தவறானது என்பதை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Partly False
Source
TN Government’s Official Order
Behindwoods
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)