சனிக்கிழமை, ஜூலை 20, 2024
சனிக்கிழமை, ஜூலை 20, 2024

HomeFact Checkமத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணி பார் டான்ஸராக இருந்தார் என்று பரவும் போலி புகைப்படம்!

மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணி பார் டான்ஸராக இருந்தார் என்று பரவும் போலி புகைப்படம்!

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணி பார் டான்ஸராக இருந்தார் என்று குறிப்பிட்டு புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணி பார் டான்ஸராக இருந்தார் என்று  குறிப்பிட்டு பரவும் புகைப்படம்
Screenshot from Twitter @Pugal0405gmail4
மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணி பார் டான்ஸராக இருந்தார் என்று  குறிப்பிட்டு பரவும் புகைப்படம் - 01
Screenshot from Twitter @rajlingam78
மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணி பார் டான்ஸராக இருந்தார் என்று  குறிப்பிட்டு பரவும் புகைப்படம் - 02
Screenshot from Twitter @Nanthivarman_

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: பிரதமர் மோடி 4:20 என்று மணி காட்டும் கடிகாரத்தின் கீழ் நிற்பதாக பரவும் போலி புகைப்படம்!  

Fact Check/Verification

மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணி பார் டான்ஸராக இருந்தார் என்று  குறிப்பிட்டு வைரலாகும் புகைப்படத்தை கூர்மையாக உற்று நோக்கையில் அப்படத்தில் காணப்படும் மற்றவர்கள் அனைவரும் வெளிநாட்டவர் என அறிய முடிந்தது. ஸ்மிரிதி இராணி என்று கூறப்படும் உருவத்தில் தலை மட்டும் தனியாக சேர்த்தது போல் இருப்பதை உணர முடிந்தது.

இருப்பினும் பலர் இத்தகவலை உண்மை என்று நம்பி பகிர்ந்து வருவதால் இதை முறையாக ஆய்வு செய்து இதுக்குறித்து விளக்க முடிவு செய்தோம். வைரலாகும் படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி, இதன் பின்னணியில் இருக்கும் உண்மைத்தன்மை குறித்து தேடினோம்.

இத்தேடலானது ட்ரிப் அட்வைஸர் இணையத்தளத்திற்கு நம்மை அழைத்து சென்றது. அத்தளத்தில் ‘Belly Dancer on the Turkish BBQ night’ என குறிப்பிட்டு புகைப்படம் ஒன்று பதிவிடப்பட்டிருந்தது. அப்படத்தை காண்கையில் வைரலாகும் படம் எடிட் செய்யப்பட்டதான் என்பது தெளிவாகியது.

மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணி பார் டான்ஸராக இருந்தார் என்று  குறிப்பிட்டு பரவும் புகைப்படம் - 03
Screengrab from tripadvisor

இப்பக்கத்தில் காணப்படும் பெல்லி நடன கலைஞரின் முகத்திற்கு பதிலாக ஸ்மிரதி இராணியின் முகம் மாற்றப்பட்டதோடு,  கலர் படத்தை கருப்பு வெள்ளை படமாக மாற்றப்பட்டு தவறான இத்தகவலை சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.

வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான படத்தையும், எடிட் செய்யப்பட்ட படத்தையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணி பார் டான்ஸராக இருந்தார் என்று  குறிப்பிட்டு பரவும் புகைப்படம் - 04

Also Read:  உலகக் கோப்பையை வென்றப்பின் மெஸ்ஸி தனது தாயை அணைத்ததாக பரவும் தவறான வீடியோ!

Conclusion

மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணி பார் டான்ஸராக இருந்தார் என்று  குறிப்பிட்டு சமூக வலைத்தளங்களில் பரவும் படம் எடிட் செய்யப்பட்ட போலியான படம் என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Altered Image

Sources

Article, from tripadvisor.in


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular