Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
Claim: தமில்நாடு, தமிலகம் என எழுத்துப்பிழையுடன் டீ-சர்ட் வெளியிட்டது திமுக.
Fact: வைரலாகும் படம் எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டதாகும்.
சமூக வலைத்தளங்களில் வெள்ளை நிற டீ-சர்ட் ஒன்றின் படம் ஒன்று பரவி வருகின்றது. அந்த டீ-சர்ட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படத்துடன் “‘தமில்நாட்டிலும் திமுக ஆச்சி’, ‘தமிலகத்திலும் திமுக ஆச்சி’” என்கிற எழுத்துப்பிழையுடைய வாசகங்கள் இடம்பெற்றிருந்தது.
இப்படத்தை பலரும் பகிர்ந்து திமுகவை விமர்சித்து வருகின்றனர்.