Claim: வீட்டிற்குள் தண்ணீர் வருவது போல தெரிந்தால் வீட்டின் கேட்களை இறுக்கமாக மூடி வையுங்கள் என்றார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்
Fact: வைரலாகும் நியூஸ்கார்டு போலியானதாகும்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடர்ந்து பெய்து வருகின்றது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வீட்டிற்குள் மழைநீர் வராமலிருக்க வீட்டின் கேட்களை இறுக்கமாக மூடி வையுங்கள் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியதாக சன் நியூஸின் நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: பிரதமர் மோடி பெண்களுடன் கர்பா நடனம் ஆடியதாக பரவும் தவறான வீடியோ!
Fact Check/Verification
வீட்டிற்குள் தண்ணீர் வருவது போல தெரிந்தால் வீட்டின் கேட்களை இறுக்கமாக மூடி வையுங்கள் என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கூறியதாக நியூஸ்கார்டு ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.
முன்னதாக இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை சன் நியூஸ் பிரசுரித்ததா என்பதை அதன் சமூக வலைத்தளப் பக்கங்களில் தேடினோம். இந்த தேடலில் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை அண்மையில் சன் நியூஸ் பிரசுரித்ததற்கான எந்த ஒரு தரவும் நமக்கு கிடைக்கவில்லை.
இதனையடுத்து வைரலாகும் நியூஸ்கார்டை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி ஆராய்ந்தோம். அதில், “மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை உடனடியாக வழங்க அறிவுறுத்தியுள்ளேன்” என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியதாக நவம்பர் 07, 2021 அன்று நியூஸ்கார்டு ஒன்றை சன் நியூஸ் வெளியிட்டிருந்ததை காண முடிந்தது.
இந்த நியூஸ்கார்டை எடிட் செய்தே மேற்கண்ட நியூஸ்கார்டு உருவாக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான நியூஸ்கார்டையும் எடிட் செய்யப்பட்ட நியூஸ்கார்டையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.


இதனையடுத்து சன் நியூஸின் டிஜிட்டல் தலைவர் மனோஜைத் தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து விசாரிக்கையில், அவரும் வைரலாகும் இந்த நியூஸ்கார்டு போலியானது என்று உறுதி செய்தார்.
Also Read: ஆமை வடிவ கேக்கை வெட்டி பிறந்தநாளை கொண்டாடினாரா சீமான்?
Conclusion
வீட்டிற்குள் தண்ணீர் வருவது போல தெரிந்தால் வீட்டின் கேட்களை இறுக்கமாக மூடி வையுங்கள் என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கூறியதாக வைரலாகும் நியூஸ்கார்டானது போலியாக உருவாக்கப்பட்டது என நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Altered Photo
Our Sources
Tweet from Sun News, Dated November 07, 2021
Telephone conversation with Manoj, Digital Head, Sun News
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)