வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024
வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024

HomeFact Checkதிருமாவளவனை பிண அரசியல் நடத்துபவர் என்றாரா முதல்வர் ஸ்டாலின்?

திருமாவளவனை பிண அரசியல் நடத்துபவர் என்றாரா முதல்வர் ஸ்டாலின்?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

விசிக தலைவர் திருமாவளவனை பிண அரசியல் நடத்துபவர் என்று முதல்வர் ஸ்டாலின் டிவீட் செய்ததாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

விசிக தலைவர் திருமாவளவனை பிண அரசியல் நடத்துபவர் என்று முதல்வர் ஸ்டாலின் டிவீட் செய்ததாக பரவும் புகைப்படம்

இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் ருத்ர தாண்டவம் எனும் திரைப்படம் கடந்த வெள்ளியன்று ( 01/10/2021) திரைக்கு வந்தது.  சமூக வலைத்தளங்களில் ஒரு சாரார் இப்படத்திற்கு ஆதரவு தெரிவித்தாலும், பொதுப்படையாக பார்க்கையில் ஊடகங்களில் மற்றும் சமூக வலைத்தளங்களில் எதிர்மறை விமர்சனங்களே இப்படத்திற்கு அதிகம் காணப்படுகின்றது.

இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ருத்ர தாண்டவம் படத்தைப் பார்த்துவிட்டு அவரது டிவிட்டர் பக்கத்தில் இப்படத்தை பாராட்டியதாக கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

வைரலாகும் அப்படத்தில்,

“இன்று அருமை தம்பி மோகன்ஜி இயக்கத்தில் வெளிவந்த ருத்ர தாண்டவம் திரைப்படம் பார்த்தேன். பிண அரசியல் பிழைப்பு நடத்தி வந்த விசிக தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களையும், போலி மதவாத கும்பல்களையும் சாட்டையும் சுழற்றி அடித்துள்ளார். இது படமல்ல பாடம்”

என்று முதல்வர் டிவீட் செய்திருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

விசிக தலைவர் திருமாவளவனை பிண அரசியல் நடத்துபவர் என்று முதல்வர் ஸ்டாலின் டிவீட் செய்ததாக பரவும் புகைப்படம் - 1

Facebook Link

விசிக தலைவர் திருமாவளவனை பிண அரசியல் நடத்துபவர் என்று முதல்வர் ஸ்டாலின் டிவீட் செய்ததாக பரவும் புகைப்படம் - 2

Facebook Link

விசிக தலைவர் திருமாவளவனை பிண அரசியல் நடத்துபவர் என்று முதல்வர் ஸ்டாலின் டிவீட் செய்ததாக பரவும் புகைப்படம் - 3

Facebook Link

Also Read: பெண்களுக்காக 9969777888 எனும் உதவி எண்ணை தமிழக காவல்துறை அறிவித்துள்ளதா?

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact check/ Verification

விசிக தலைவர் திருமாவளவன் குறித்து முதல்வர் டிவீட் செய்ததாக வைரலாகும் அந்த புகைப்படத்தை காணும்போதே அது போலியானதுதான் என்பதை நம்மால் உணர முடிகின்றது. ஏனெனில் அப்படத்தில் தகாத வார்த்தை ஒன்று பயன்படுத்தப் பட்டிருந்தது. இருப்பினும் இதை பலர் உண்மை நம்பி பகிர்ந்து வருவதால் இதை முறையாக ஆய்வு செய்து தெளிவுப்படுத்த விரும்பினோம்.

வைராலும் படத்தில் இருந்த டிவீட்டானது கடந்த வியாழனன்று (செப்டம்பர் 30) இரவு 10 : 44 -க்கு  முதல்வர் தரப்பிலிருந்து பதிவிட்டதாக உள்ளது. ஆகவே முதல்வரின் அதிகாரப் பூர்வ டிவிட்டர் பக்கத்தில் செப்டம்பர் 30 அன்று இவ்வாறு ஒரு டிவீட் பதிவிடப்பட்டுள்ளதா என்பதை தேடினோம்.  

அதில் அன்றைய தினத்தில் இவ்வாறு ஒரு டிவீட்டை முதல்வர் பதிவிட்டதாக எந்த ஒரு ஒரு தரவும் நமக்கு கிடைக்கவில்லை.

ஸ்டாலின் அவர்கள் செப்டம்பர் 30 ஆம் தேதி அரசு தரப்பு சுற்றுப்பயணமாக தருமபுரியில் இருந்துள்ளார். அங்கு தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் முடிவுற்ற கட்டிடங்கங்களை திறந்து வைத்துள்ளார், ஓகேனக்கல் பென்னாகரம் அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியில் ஆய்வு மேற்கொண்டுள்ளார், வத்தல்மலை பழங்குடியின மக்களைச் சந்தித்துள்ளார்.

இதுக்குறித்த பதிவுகள்  மட்டுமே செப்டம்பர் 30 தேதி ஸ்டாலின் அவர்களின் டிவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்தது. இதை தவிர்த்து வேறு எந்த ஒரு பதிவும் அன்றைய தினத்தில் பதிவிடப்படவில்லை.

இதனை தொடர்ந்து திமுக தகவல் மற்றும் செய்தித் தொடபுத் துறை பொறுப்பாளரைத் தொடர்புக் கொண்டு வைரலாகும் டிவீட் குறித்து கேட்டோம். அதற்கு அவர்கள்,

“இது பொய்யானது, போலியாக உருவாக்கப்பட்டுள்ளது.”

என்று விளக்கமளித்தனர்.

ருத்ரதாண்டவம் திரைப்படம் அக்டோபர் 1 ஆம் தேதியே வெளிவந்துள்ளது. ஆனால் அதற்கு ஒரு நாளுக்கு முன்பே, அதுவும் அரசு பயணமாக தர்மபுரியில் நாள் முழுவதும் பிசியாக இருந்த முதல்வர், அத்திரைப்படத்தை கண்டு பாராட்டி டிவீட் செய்துள்ளார் என்பது நம்பும்படியாக இல்லை.

ஒருவேளை முதல்வருக்காக  தர்மபுரியில் ஏதேனும் சிறப்பு காட்சி ஏற்பாடு செய்யப்பட்டு முதல்வர் சினிமா பார்த்திருந்தால், அது நிச்சயமாக செய்தி பொருளாக மாறி இருக்கும். ஆனால் இவ்வாறு ஒரு செய்தி எந்த ஊடகத்திலும் இதுவரை வரவில்லை.

இவற்றையெல்லாம் வைத்து பார்க்கும்போது திருமாவளவன் குறித்து முதல்வர் டிவீட் செய்ததாக சமூக ஊடகங்களில் பரவும் புகைப்படம் முற்றிலும் போலியானது என்பது உறுதியாகின்றது.

Also Read: எச்.ராஜா எனக்கு தந்தை போன்றவர் என்று சீமான் கூறியதாக வதந்தி!

Conclusion

விசிக தலைவர் திருமாவளவனை பிண அரசியல் நடத்துபவர் என்று முதல்வர் ஸ்டாலின் டிவீட் செய்ததாக  பரவும் புகைப்படம் முற்றிலும் போலியானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources

DMK IT Wing Secretary Testimonial:-

M.K.Stalin’s Tweets on that day, Sep 30


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Most Popular