வியாழக்கிழமை, அக்டோபர் 10, 2024
வியாழக்கிழமை, அக்டோபர் 10, 2024

HomeFact Checkவித்தியாசமாக சத்தம் எழுப்பும் அதிசய பாம்பு! வைரலாகும் வீடியோ உண்மையானதா?

வித்தியாசமாக சத்தம் எழுப்பும் அதிசய பாம்பு! வைரலாகும் வீடியோ உண்மையானதா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

தெலங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தில் வித்தியாசமாக சத்தம் எழுப்பிய பாம்பு என்று கூறி வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இதுக்குறித்து ஊடகங்களிலும் செய்தி வந்துள்ளது.

சமூக வலைத்தளங்களிலும் வித்தியாசமாக சத்தம் எழுப்பும் அதிசய பாம்பு என்று கூறி வீடியோ ஒன்று பரவி வருகின்றது. கருப்பு நிறத்தில் பார்ப்பதற்கு வித்தியாசமாக இருக்கும் இந்த பாம்பு வாயைத் திறக்கும்போது வித்தியாசமான ஒலி ஒன்று கேட்கின்றது.

இந்த நிகழ்வானது தெலங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தில் நடைப்பெற்றதாக கூறி இவ்வீடியோ பரப்பப்பட்டு வருகின்றது. சன் நியூஸ், ABN தெலுங்கு உள்ளிட்ட செய்தி ஊடகங்களில் இது செய்தியாக வந்துள்ளது.

வித்தியாசமாக சத்தம் எழுப்பும் அதிசய பாம்பு என்று வைரலாகும் வீடியோ குறித்த செய்தி - 1

Archive Link: https://archive.ph/LSLcO

வித்தியாசமாக சத்தம் எழுப்பும் அதிசய பாம்பு என்று வைரலாகும் வீடியோ குறித்த செய்தி - 2

Archive Link: https://archive.ph/SkosW

இதைத் தவிர்த்து சில ஆன்லைன் ஊடகங்களிலும் இச்செய்தி வந்துள்ளது.

வித்தியாசமாக சத்தம் எழுப்பும் அதிசய பாம்பு என்று வைரலாகும் வீடியோ குறித்த செய்தி - 3

Archive Link: https://archive.ph/G6E1k

வித்தியாசமாக சத்தம் எழுப்பும் அதிசய பாம்பு என்று வைரலாகும் வீடியோ குறித்த செய்தி - 4

Archive Link: https://archive.ph/2inME

ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact Check/Verification

வித்தியாசமாக சத்தம் எழுப்பும் அதிசய பாம்பு என்று கூறி வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைராலனதைத் தொடர்ந்து, இந்த வீடியோவின் பின்னணியில் இருந்த உண்மைத்தன்மை குறித்து அறிய முடிவு செய்தோம்.

இந்த வீடியோவை நாம் ஆய்வுக்கு உட்படுத்தும்போது, இரண்டு  கேள்விகள் குறித்து நமக்கு தெளிவு பெற வேண்டியிருந்தது.

முதல் கேள்வி: வைரலாகும் வீடியோவில் இருக்கும் பாம்பு உண்மையாகவே வித்தியாசமாக சத்தம் எழுப்பியதா?

இரண்டாம் கேள்வி: இவ்வீடியோ உண்மையிலேயே தெலங்கானாவில் எடுக்கப்பட்டதா?

மேற்கூறிய இரண்டு கேள்விகளுக்கும் பதில் அறிய இவ்வீடியோக் குறித்து தீவிரமாக ஆய்வு செய்தோம். இந்த ஆய்வில் வைரலாகும்வீடியோவில் இருக்கும் சத்தம் பொய்யானது என்பதையும், இவ்வீடியோ தெலங்கானாவில் எடுக்கப்பட்டதல்ல என்பதையும் நம்மால் அறிய முடிந்தது.

நம் தேடலில் இந்த வீடியோவை மைக் மார்ட்டின் என்பவர் தனது யூடியூப் சேனலில் பதிவு செய்துள்ளதை அறிய முடிந்தது.

இந்த வீடியோவின் டிஸ்கிப்ஷனில், “And I am sorry to break the news to the internet that the snake is not singing. That is my own voice whenever the snake opens its mouth. Apparently, it had to be said after this went viral in India and made the news.” என்று குறிப்பிடப்பட்டுள்ளதையும் நம்மால் காண முடிந்தது.

இதை தமிழில் மொழிப்பெயர்த்தால்,

“இணையத்தளங்களில் வலம் வரும் செய்தியை உடைப்பதற்கு என்னை மன்னிக்கவும்.

உண்மையில் அந்த பாம்பு  பாடவில்லை.  பாம்பு எப்போதெல்லாம் வாய் திறந்ததோ, அப்போதெல்லாம் நான்தான் குரல் கொடுத்தேன்.

இந்தியாவில் இந்த வீடியோ செய்திப் பொருளாக மாறியுள்ளது. ஆகவே இதுக்குறித்த உண்மையை நான் சொல்ல வேண்டியது அவசியம். அதனாலேயே இதை கூறுகிறேன்”

என்பதே  பொருளாக வரும்.

வைரலாகும் வீடியோவில் இருக்கும் பாம்பு  பார்ப்பதற்கு இந்திய வகை பாம்புபோல் இல்லாததால் இதுக்குறித்து தேடினோம். இதில் Marylandzoo.Org எனும் தளத்தில் இப்பாம்பு குறித்த தகவல்கள் நமக்கு கிடைத்தது.

வைரலாகும் வீடியோவில் இருக்கும் பாம்பு ஈஸ்டர்ன் ஹோக்னஸ் (Eastern Hognase) எனும் பாம்பு வகையைச் சார்ந்ததாகும்.  இது வட அமெரிக்கா பகுதிகளிலேயே அதிகம் வாழும். இவ்வகை பாம்பு இந்தியாவில் வாழ்வதில்லை.

Source: Marylandzoo.org

மேற்கிடைத்த ஆதாரங்களின்படி பார்க்கும்போது, பாம்பு வித்தியாசமாக சத்தம் எழுப்புகின்றது என்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் கருத்து முற்றிலும் தவறான ஒன்று என்பது தெளிவாகின்றது. மேலும் இவ்வீடியோ தெலங்கானா மாநிலம் கரீம்நகரில் எடுக்கப்பட்டது என்று பரவும் தகவலும் பொய்யானது என்று நமக்கு தெளிவாகின்றது.

Also Read: தனுஷ்கோடியில் இரண்டு கடல்கள் சேரும் இடம் என்று வைரலாகும் படம் உண்மையானதா?

Conclusion

சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் தெலங்கானா மாநிலம் கரீம்நகரில் வித்தியாசமாக சத்தம் எழுப்பிய பாம்பு என்று கூறி வைரலாகும் வீடியோவில் வரும் ஒலி பொய்யானது என்பதையும், அவ்வீடியோ உண்மையில் தெலங்கானாவில் எடுக்கப்பட்டதல்ல  என்பதையும் உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.  

இத்தகவலை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம். ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources

Mike Martin: https://www.youtube.com/watch?v=_CTIiln4sPs

Marylandzoo.Org: https://www.marylandzoo.org/animal/eastern-hognose-snake/


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Most Popular