சனிக்கிழமை, நவம்பர் 2, 2024
சனிக்கிழமை, நவம்பர் 2, 2024

HomeFact Checkதனுஷ்கோடியில் இரண்டு கடல்கள் சேரும் இடம் என்று வைரலாகும் படம் உண்மையானதா?

தனுஷ்கோடியில் இரண்டு கடல்கள் சேரும் இடம் என்று வைரலாகும் படம் உண்மையானதா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

தனுஷ்கோடியில் இரண்டு கடல்கள் சேரும் இடம் என்று கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

தனுஷ்கோடியில் இரண்டு கடல்கள் சேரும் இடம் என்று வைரலாகும் படம்

தமிழகத்தின் கடைக்கோடியில் காணப்படும் பகுதி தனுஷ்கோடி. இது பாம்பனுக்கு தென் கிழக்கே, இராமேஸ்வரத்திலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது. இலங்கையுடன் கடல்வாணிபம் புரிய தனுஷ்கோடி சிறந்த துறைமுகமாக விளங்கியது.

இப்பகுதியில் 1964 ஆம் ஆண்டு மாபெரும் புயல் ஒன்று ஏற்பட்டது. இப்புயலில் மொத்த தனுஷ்கோடி நகரமே கடலில் மூழ்கியது. இப்புயல் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இதன்பின் இந்நகரத்தை வாழத் தகுதியற்ற நகரம் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. இப்பகுதியில் தற்சமயம் சில மீனவ குடும்பங்கள் மட்டுமே உள்ளன.

இந்தியப் பெருங்கடலும் வங்கக் கடலும் கூடும் பகுதியான அரிச்சல் முனை தனுஷ்கோடியில்தான் காணப்படுகின்றது. தற்போது சமூக வலைத்தளங்களில்  தனுஷ்கோடியில் இரண்டு கடல்கள் சேரும் இடம் என்று கூறி புகைப்படம் ஒன்று வைரலாகி வருகின்றது. அப்புகைப்படத்தில் இரண்டு கடல்களும் ஒன்றோடு ஒன்று இணையாமல் வெவ்வேறு நிறங்களில் காணப்படுகின்றது.

வைரலாகும் அப்புகைப்படத்தில், “ராமேஸ்வரம், தனுஷ்கோடியில் இரண்டு கடல்கள் சேரும் இடம். ஆனால் இரண்டு கடல் நீரும் ஒன்றுக்கொன்று கலக்காது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

தனுஷ்கோடியில் இரண்டு கடல்கள் சேரும் இடம் என்று வைரலாகும் படம் குறித்த பதிவு - 2

Archive Link: https://archive.ph/dXyGO

தனுஷ்கோடியில் இரண்டு கடல்கள் சேரும் இடம் என்று வைரலாகும் படம் குறித்த பதிவு - 3

Archive Link: https://archive.ph/miQMm

தனுஷ்கோடியில் இரண்டு கடல்கள் சேரும் இடம் என்று வைரலாகும் படம் குறித்த பதிவு - 1

Archive Link: https://archive.ph/Sb9fS

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact Check/Verification

சமூக வலைத்தளங்களில் தனுஷ்கோடியில் இரண்டு கடல்கள் சேரும் இடம் என்று கூறி வைரலாகும் புகைப்படத்தின் உண்மைத்தன்மை குறித்து அறிய அப்புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் சர்ச் முறையில் ஆய்வு செய்தோம்.

இவ்வாறு செய்ததில் இப்புகைப்படம் ராமேஸ்வரத்தில் எடுக்கப்பட்டதல்ல, அது அலாஸ்கா வளைகுடாப் பகுதியில் எடுக்கப்பட்டது என்கிற உண்மை நமக்கு தெரிய வந்தது.

 ஓப்பரா நியூஸ் எனும் இணையத்தளத்தில், “Check Out The Five Sea Wonders Of The World That You Might Not Have Thought About That Existed”  எனும் தலைப்பில் கட்டுரை ஒன்று வெளியிட்டிருந்தனர். இதில் அலாஸ்கா வளைகுடாப் பகுதி குறித்தும் குறிப்பிட்டிருந்தனர். அதில் வைரலாகும் படமும் இடம்பெற்றிருந்தது.

அட்லாண்டிக் பெருங்கடலும் பசிபிக் பெருங்கடலும் அலாஸ்கா வளைகுடாப் பகுதியில் ஒன்றாக இணைகின்றது. இவ்விரு கடல்களின் அழுத்தமும் வெப்பமும் ஒன்றுக்கு ஒன்று வேறுபட்டிருப்பதால் இவ்விரு கடல்களின் நீர்கள் ஒன்றுக்கொன்று கலப்பதில்லை.

Source: Opera News

wow videos எனும் யூ டியூப் பக்கத்திலும் இக்கடல் குறித்த வீடியோ ஒன்று இடம்பெற்றுள்ளது.

Also Read: கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் இரண்டு ஆண்டுக்குள் இறந்து விடுவார்களா?

Conclusion

சமூக வலைத்தளங்களில் தனுஷ்கோடியில் இரண்டு கடல்கள் சேரும் இடம் என்று கூறி வைரலாகும்  புகைப்படம் உண்மையில் தனுஷ்கோடியில் எடுக்கப்பட்டதல்ல, அது அலாஸ்கா வளைகுடாப் பகுதியில் எடுக்கப்பட்டதாகும்.

இத்தகவலை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம். ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources

Opera News: https://ng.opera.news/ng/en/environment/0a9698ba44b45407abe534aea92ea8da

Wow videos: https://www.youtube.com/watch?v=NA5-XGcj0LQ


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Most Popular