Claim: அண்மையில் தமிழிசை முன்னால் ஆட்டோ டிரைவர் தாக்கப்பட்டார்.
Fact: இச்செய்தி 2018 ஆம் ஆண்டின் பழைய செய்தியாகும்.
தமிழிசை சௌந்திரராஜன் தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் பாஜகவில் இணைந்தார். இதனையடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் தென்சென்னை தொகுதியில் இவர் பாஜக சார்பில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அண்மையில் ஆட்டோ டிரைவர் ஒருவர் பெட்ரோல் விலையுயர்வு குறித்து கேள்வி கேட்டதால் தமிழிசை முன்னாலேயே பாஜகவினர் அவரை தாக்கியதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

