ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28, 2024
ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28, 2024

HomeFact Checkஅயோத்தி ராமர் கோயிலுக்கு அமெரிக்காவில் இருந்து வழங்கப்பட்ட வாகனங்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

அயோத்தி ராமர் கோயிலுக்கு அமெரிக்காவில் இருந்து வழங்கப்பட்ட வாகனங்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: அயோத்தி ராமர் கோயிலுக்கு அமெரிக்காவிலிருந்து 11 வாகனங்கள் மற்றும் ஒரு தேர் நன்கொடையாக வழங்கப்பட்டது… அனைத்தும் தூய தங்கத்தால் ஆனது.

Fact: வைரலாகும் வீடியோ தகவல் தவறானதாகும். தெலுங்கானா பத்ராசலம் கோயிலுக்கு வழங்கப்பட்ட நன்கொடை வாகனங்கள் இவையாகும்.

அயோத்தி ராமர் கோயிலுக்கு அமெரிக்காவில் இருந்து நன்கொடையாக வழங்கப்பட்ட வாகனங்கள் என்று வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

”அயோத்தி ராமர் கோயிலுக்கு அமெரிக்காவிலிருந்து 11 வாகனங்கள் மற்றும் ஒரு தேர் நன்கொடையாக வழங்கப்பட்டது… அனைத்தும் தூய தங்கத்தால் ஆனது” என்று இந்த வீடியோ பரவி வருகிறது.

Screenshot from X @kaippulla123

Archived Link

Screenshot from X @Paulvarnan96280

Archived Link

Screenshot from X @Gayathr79252322

Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: மத்திய பிரதேசம் இந்தூர் பேருந்து நிலையம் என்று பரவும் கனடா வீடியோ!

Fact Check/Verification

அயோத்தி ராமர் கோயிலுக்கு அமெரிக்காவில் இருந்து வழங்கப்பட்ட தங்க வாகனங்கள் என்று பரவும் வீடியோ தகவல் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் வீடியோவை கீ-ப்ரேம்களாகப் பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது அந்த வாகனங்கள் உண்மையில் தெலுங்கானா பத்ராசலத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ராமச்சந்திர ஸ்வாமி கோயிலுக்கு நன்கொடையாக அளிக்கப்பட்டவை என்பது நமக்குத் தெரிய வந்தது.

கடந்த மார்ச் 21, 2023 அன்று v6 News Telugu வெளியிட்டிருந்த செய்தி வீடியோவில் அமெரிக்காவின் ஆர்ய வைஷ்ய வாசவி சங்கம் இந்த வாகனங்களை பத்ராசலம் கோயிலுக்கு நன்கொடையாக வழங்கியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. “12 New Gold Divya Vahana Pratista At Bhadrachalam Temple, NRI Vasavi Sangham Donate Vahanas” என்று இந்த வீடியோ குறித்த செய்திக்குறிப்பு இடம்பெற்றுள்ளது.

கிட்டதட்ட 67 லட்ச ரூபாய்க்கு இந்த சங்கம் தங்கத்தினால் ஆன 12 வாகனங்களை ஸ்ரீ ராமச்சந்திர ஸ்வாமி கோயிலுக்கு வழங்கப்பட்டது என்று இதுகுறித்த செய்திகளும் வெளியாகியுள்ளன. அவற்றை இங்கே, இங்கே மற்றும் இங்கே படியுங்கள்.

 Also Read: 1330 குறள்களையும் மனப்பாடமாக சொல்லும் மாணவர்களுக்கு ₹25000 பரிசாக அளிக்கின்றதா தமிழக அரசு?

Conclusion

அயோத்தி ராமர் கோயிலுக்கு அமெரிக்காவில் இருந்து வழங்கப்பட்ட தங்க வாகனங்கள் என்று பரவும் வீடியோ தகவல் தவறானது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
YouTube Video from V6 News Telugu, Dated March 21, 2023


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular