Fact Check
எஸ்.வி.சேகர் ஊடகவியலார்கள் குறித்து கடுமையான வார்த்தைகளை பேசியதாக தவறான வதந்தி
நடிகர் எஸ்.வி.சேகர் ஊடகவியலார்களை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டியதுப் போன்ற டிவீட் சமூக வலைத்தளங்களில்வ வைரலாகி வருகிறது.
Fact Check/Verification
நாடக ஆசிரியரும் நடிகருமான எஸ்.வி. சேகர் அவர்கள் ஊடகவியலாளர்களைத் தரக்குறைவாக விமர்சித்து எழுதியதாக டிவீட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது.
பலத் தரப்பட்டவர்களும் இந்த டிவீட்டை பகிர்ந்து, தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்திருந்தனர்.
இச்செய்தியின் உண்மைத் தன்மைக் குறித்து அறிய நியூஸ் செக்கர் சார்பில் நாம் இதை ஆராய்ந்தோம்.
ஜெயம்.எஸ்.கே.கோபி என்பவர், சமூக வலைத் தளங்களில் வைரலாகும் இந்த டிவீட் எஸ்.வி.சேகர் அவர்களுடையதல்ல. இதுத் தவறாகப் பரப்பப்பட்டுள்ளது என்று டிவீட் செய்திருந்தார். இதை எஸ்.வி.சேகர் அவர்களும் ‘ரீடிவீட்’ செய்திருந்தார்.

உண்மைக் குறித்து அறிய, நியூஸ் செக்கர் சார்பில், நாம் எஸ்.வி.சேகர் அவர்களைத் தொலைபேசி மூலம் தொடர்புக் கொண்டுப் பேசினோம். அப்போது,
“இது முற்றிலும் தவறானது. ஒரு குறிப்பிட்ட கும்பலால் இது செய்யப்படுகிறது. என் தரப்பில் இதுக்குறித்து பெருநகர சென்னை மாகராட்சி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளேன்”
என்று அவர் பதிலளித்தார்.
Conclusion
நம் விரிவான விசாரணைக்குப்பின் எஸ்.வி.சேகர் அவர்களால் பகிரப்பட்ட டிவீட் என்று வைரலாக்கப்படும் ட்வீட்டானது அவரால் எழுதப்பட்ட ட்வீட் இல்லை என்பதும், இது வேண்டுமென்றே தவறானவர்களால் ஏற்ப்படுத்தப்பட்ட பொய்யான டிவீட் என்பதும் தெளிவாகியுள்ளது.
Sources
Twitter profil: https://twitter.com/Saminat72245500/status/1285090679387877376
Twitter profile: https://twitter.com/JSKGopi/status/1285079351306797057
Result: False/Fabricated
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு உங்கள் கேள்விகளை அனுப்பலாம் அல்லது எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று, அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)