Fact Check
‘திருப்பரங்குற்றத்தில் கலவர சூழ்ச்சியை கண்டிக்காத தலைவர்கள்’ என்று புதிய தலைமுறை நியூஸ்கார்டு வெளியிட்டதா?
Claim
திருப்பரங்குற்றத்தில் கலவர சூழ்ச்சியை கண்டிக்காத தலைவர்கள் என்று புதிய தலைமுறை நியூஸ்கார்டு வெளியிட்டது.
Fact
வைரலாகும் நியூஸ்கார்டு போலியானது என்று புதிய தலைமுறை நியூஸ்கார்டு வெளியிட்டுள்ளது.
“திருப்பரங்குன்றத்தில் பா.ஜ.க மற்றும் இந்து முன்னணி அமைப்பின் கலவர சூழ்ச்சியை கண்டிக்காத அரசியல் தலைவர்கள்!” என்று குறிப்பிட்டு தவெக தலைவர் விஜய், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அமமுக தலைவர் டிடிவி தினகரன், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் புகைப்படங்களுடன் புதிய தலைமுறை நியூஸ்கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.



சமூக ஊடகங்களில் வெளிவந்த இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: அஇஅதிமுக 142 இடங்களை பிடிக்கும் என்று இந்தியா டுடே கருத்துக்கணிப்பு வெளியிட்டதா?
Fact Check/Verification
திருப்பரங்குற்றத்தில் கலவர சூழ்ச்சியை கண்டிக்காத தலைவர்கள் என்று புதிய தலைமுறை வெளியிட்டதாக நியூஸ்கார்டு ஒன்று பரவியதை தொடர்ந்து இதுக்குறித்து அறிய அந்நிறுவனத்தின் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம்.
அத்தேடலில் வைரலாகும் நியூஸ்கார்டை புதிய தலைமுறை வெளியிடவில்லை என்று அந்நிறுவனம் அதன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதை காண முடிந்தது.

இதனைத் தொடர்ந்து புதிய தலைமுறையின் டிஜிட்டல் தலைவர் இவானியை தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து விசாரிக்கையில் வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது என்பதை அவரும் உறுதி செய்தார்.
Also Read: மழை வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் வாகனங்கள்; வைரலாகும் படம் தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டதா?
Conclusion
திருப்பரங்குற்றத்தில் கலவர சூழ்ச்சியை கண்டிக்காத தலைவர்கள் என்று புதிய தலைமுறை வெளியிட்டதாக பரவும் நியூஸ்கார்டு போலியானதாகும்.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
X post by Puthiya Thalaimurai, dated December 4, 2025
Phone Conversation with Ivany, Digital Head, Puthiya Thalaimurai